என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி"
- வருங்காலத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் மாநில பேரிடர் மேலாண்மை சிறப்பு படை அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கும் குடும்பங்களின் பொருளாதார தேவைக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்களை பெரும் இன்னலுக்கு தள்ளிய இந்த இயற்கை பேரிடரால் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போதும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.
வருங்காலத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் மாநில பேரிடர் மேலாண்மை சிறப்பு படை அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கும் குடும்பங்களின் பொருளாதார தேவைக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ்நாட்டிலும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்கார்ந்து விரைந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
திருச்சி:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி செயலாளர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக அளவில் பேரல் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால் பேரல் விலை குறையும்போதும் இங்கு விலை ஏற்றப்படுகிறது என்பதே உண்மை. ஆகவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் விலைவாசியும் குறைந்து விடும்.
பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக எங்களின் முடிவை தெரிவிப்போம். மக்களுக்கு சேவை செய்ய தேர்தல் களத்துக்கு வரவேண்டும். ஆனால் இன்றைக்கு தேர்தலில் போட்டியிட சாதாரண குடிமகன்கள் தயக்கப்படுகிறார்கள். ஏனென்றால் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆகவே அதற்கு ஈடு கொடுத்து நம்மால் முடியாது என்று ஒதுங்குகிறார்கள்.
இது உண்மையான ஜனநாயகம் கிடையாது. நாம் தயங்கும்போது கூட்டணிக்கு செல்ல நேரிடுகிறது. இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்க இருக்கின்றோம். 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கட்சி நிர்வாகிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் தனித்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் நடிப்பதால் மட்டுமே சமூகம் கெட்டுப் போகவில்லை. ஆன்லைன் ரம்மி ஆன்லைன் கிரிக்கெட் போன்றவை உலக அளவில் இருக்கிறது. இதில் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. நாமக்கல்லில் ஒருவர் ஆன்லைன் ரம்மி பார்த்து விளையாடி தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதும் தடை செய்வதும் அரசின் கையில் இருக்கிறது. இதற்கு ஒட்டுமொத்தமாக சட்டத்தை கொண்டு வந்து தடுக்க வேண்டும்.
போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆன்லைன் ரம்மி, டாஸ்மாக் போன்றவற்றை தடை செய்து நாட்டை திருத்துங்கள். போதை பொருள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒதுக்கினால் அடக்க முடியும்.
தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் முன்னணி கட்சிகளாக இருக்கின்றன. அ.தி.மு.க.வில் இப்போது அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து சொல்ல நான் ஜோசியர் இல்லை. ஒற்றுமை இல்லை என்றால் எதிர்காலம் இல்லை. முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.
தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டிலும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்கார்ந்து விரைந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த இருக்கிறது என்று கேட்டதற்கு, மின் வாரியத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. மாநில அரசின் வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டால் மாநில அரசுகள் இங்கு தேவையில்லை. விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது கட்சியின் மாநில பொருளாளர் சுந்தரேசன், மாநில துணைப் பொதுச்செயலாளர் சுந்தர், ஈஸ்வரன், மகாலிங்கம், திருச்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தொடங்கி வைத்தார்
- பேச்சாளர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கலை இலக்கிய அணியின் சார்பில் தென் மண்டல அளவிலான பேச்சாளர் பயிற்சி பட்டறை கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.
மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் நாஞ்சில் எம்.எஸ். அமலன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மாணவர்அணி செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் கலந்து கொண்டு பேச்சாளர் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.
சமூக பொது நல இயக்க பொதுச்செயலாளர் ஏ.எஸ். சங்கர பாண்டியன், ஆசிரியர்கள் ஜோசப், மேரி விஜயா ஆகியோர் பேச்சாளர் ஆவது எப்படி?என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஜெபசிங், தோவாளை ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சந்திரா, மாநகரப் பகுதி செயலாளர் டாக்டர் நலம் குமார், நெல்லை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் ராஜகணபதி, விருதுநகர் மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் பரமசிவம், வள்ளியூர் அவைத்தலைவர் அந்தோணிசாமி, பணகுடி நகர செயலாளர் மைக்கில் அந்தோணி, நாகர்கோவில் மாநகர 34-வது வார்டு செயலாளர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் இந்த பேச்சாளர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. இந்த சான்றிதழ்களை மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் வழங்கி னார். முடிவில் கோவளம் ஊராட்சி செயலாளர் அகிலன் நன்றி கூறினார்.
- காவல்துறையினர் போராட்ட சமயத்தில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.
- தமிழக அரசு மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் கைது செய்த மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதி, தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பிற்கு நியாயம் கிடைக்கப்பெற களத்தில் போராடிய மாணவர்களும், இளைஞர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையான முறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வருகிற செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறையினர் போராட்ட சமயத்தில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.
எனவே, இருபுறமும் நடந்தேறியவற்றை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் கைது செய்த மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்