search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவன ஊழியர்"

    • கணவன்- மனைவி மீது வழக்கு
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் வென்ஸ்லாஸ் (வயது 48). இவர் தனியார் உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (48), அவரது மனைவி விக்னேஸ்வரி (45) ஆகியோ ருக்கும் வழி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்ப டுகிறது. இதையடுத்து வென்ஸ்லாஸ் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஜோசப் மற்றும் விக்னேஸ்வரி ஆகியோர் சேர்ந்து அவரை தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வென்ஸ்லாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் துள்ளனர்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மனைவி இறந்த தினத்தில் சோகம்
    • கடந்த 2 நாட்களாக அவர் யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்தார்.

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் அருகே உள்ள தேவர் குளம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பி கண்ணன் (வயது 52). இவர் தற்போது ராணி தோட்டம் வடக்கு தெருவில் வசித்து வந்தார்.

    இவரது மனைவி ஜூலியட் கில்டா. இவர்க ளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜூலியட் கில்டா இறந்து விட்டார். அதன் பிறகு தம்பிக்கண்ணன் மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் மனைவி யின் ஓராண்டு நினைவு தினம் இன்று வருவதை யடுத்து அவர் மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார். மனைவி இறந்த தை நினைத்து தினமும் புலம்பிக் கொண்டிருந்தார். தம்பிகண்ணனை உறவி னர்கள் சமாதானம் செய்தனர்.

    கடந்த 2 நாட்களாக அவர் யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தம்பி கண்ணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தம்பி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆசாரிப் பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவி இறந்த தினத்தில் கணவர் தறங கொலை செய்து கொண்ட சம்பவம் உறவி னர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார்.
    • ஏழுமலை ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (21). இவர் ஈரோட்டில் உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

    அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனை லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் ஏழுமலைக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஏழுமலை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஏழுமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் 2 பேரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து ஏழுமலை கைது செய்யப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார்.

    • விபத்தில் தனயார் நிறுவன ஊழியர் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த காகம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (48). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் வேலை முடிந்து ஈரோட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மொடக்குறிச்சி அடுத்த கருந்தேவன்பாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மூதாட்டி வந்தார்.

    அப்போது அவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் சந்திரசேகர் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×