search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்"

    • கல்லூரி மாணவிகள் வியப்பாக பார்பது போன்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
    • மாணவிகளுக்கு இடையூறினை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    வேலூர்:

    வேலூரில் வாலிபர் ஒருவர் ரீல்ஸ் மூலம் லைக் பெறுவதற்காக பெண் வேடமிட்டு விலை உயர்ந்த சொகுசு பைக்கில் வேலூர் நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    பெண் போல அலங்காரம் செய்து மற்றும் தலையில் பூ வைத்து சேலை உடுத்தி, அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிகள் அமைந்திருக்கும் பகுதிகள், பழைய பஸ் நிலையம், முக்கிய வீதிகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் செல்கிறார். மேலும் அவர் கல்லூரி முடிந்து செல்லும் பெண்கள் முன்னிலையில் வேகமாக செல்வது போன்றும், அதை அந்த கல்லூரி மாணவிகள் வியப்பாக பார்பது போன்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் பெண்கள் அருகில் சென்று மோதுவது போன்று வேகமாக செல்வதும், பைக்கை முறுக்கி டயர் புழுதி பறக்க செல்வது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இது மாணவிகளுக்கு இடையூறினை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை தேவை என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பாகாயம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறாக பைக் சாகசம் மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் வாலிபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • தற்போது ரீல்ஸில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும்.
    • விரைவில் வர உள்ள புது அப்டேட்டின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம்.

    இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் என்பது வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும். இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்படுகிறது. தற்போது ரீல்ஸில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை தொகுத்து அதற்கு பின்னணியில் பாடல்களை ஒலிக்கவிட்டு ரீல்ஸாக பதிவிட முடியும் என்கிற புதிய அம்சத்தை அந்நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டுவர் உள்ளது.


    தற்போது ரீல்ஸில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். விரைவில் வர உள்ள புது அப்டேட்டின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம். இதற்காக விதவிதமான டெம்ப்ளேட்களையும் அந்நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.
    • இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் என்பது வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும்.

    இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் என்பது வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும். இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்படுகிறது. தற்போது ரீல்ஸில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் பயனர்கள் பதிவிடும் 15 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்கள் அனைத்தும் தானாகவே ரீல்ஸ் பக்கத்திற்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    15 நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோக்கள் மட்டுமே வீடியோ செக்‌ஷனில் இடம்பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் இனி பதிவிடும் வீடியோக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே உள்ள பழைய வீடியோக்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

    ×