search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக்கரி கடை"

    • மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை சோளிங்கர் சாலையில் ஏழுமலை (வயது 44 ) என்பவர் பேக்கரி மற்றும் சுவீட் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல ஏழுமலை மற்றும் கடை ஊழியர்கள் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பேரும் கடையின் உள்ளே இருந்த மிக்சர், சுவீட், கேக் ஆகியவற்றை வயிறார ருசித்து சாப்பிட்டனர். நன்றாக வயிறு நிரம்ப சாப்பிட்ட பிறகு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணம் மற்றும் திருப்பதி உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    பின்னர் மீண்டும் மறுநாள் காலை ஏழுமலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் திருப்பதி உண்டியலில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏழுமலை வாலாஜா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருடர்கள் 2 பேரும் சுவீட், கேக், மிக்சரை ருசித்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது . இது சம்பந்தமாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆயுத பூஜையின்போது இனிப்புகளின் தேவை அதிகரிக்கும்.
    • இனிப்பு விற்பனை கடைகள், பேக்கரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இந்துக்களின் முக்கியமான விழாவான நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி அடுத்த மாதம் வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகையும் வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியாகும். இந்த விசேஷ நாட்களில் இனிப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு.

    ஆயுத பூஜை விழாவின்போது இனிப்புகளின் தேவை அதிகரிக்கும்.

    இந்நிலையில் பண்டிகை காலங்களில் இனிப்புகளின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில்,

    * இனிப்பு விற்பனை கடை, பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.

    * தேவை அதிகரிப்பதால் இனிப்புகளின் தரத்தை குறைக்க வாய்ப்புள்ளது.

    * இனிப்பு விற்பனை கடைகள், பேக்கரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் மற்றும் பரிசுபொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை இளைய தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வ.உ.சி. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    குபேந்திரன் பழைய வண்ணா ரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவர் சொந்தமாக இடம் வாங்கு வதற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் குபேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தமிழகம் முழுவதும் உணவு பாது காப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • 2 கடைகளில் ரூ.1250 மதிப்புள்ள காலவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்

    மணவாளக்குறிச்சி :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி, இனிப்பகங்கள் மட்டு மின்றி சிலர் வீடுகள், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக பலகா ரங்கள் தயாரிப்பு தொழி லில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடங்களில் தரமான பலகாரங்கள் தயாரிக்கப் படுகிறதா? என்று ஆய்வு செய்ய மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தர விட்டார்.

    அதன்பேரில் தமிழகம் முழுவதும் உணவு பாது காப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி குமரி மாவட் டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய குழு குளச்சல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, வெள்ளமோடி பகுதிகளில் 12 பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது 2 கடைகளில் ரூ.1250 மதிப்புள்ள காலவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னர் உரிமையாளருக்கு எச்ச ரிக்கை நோட்டீஸ் வழங்கப் பட்டது.

    • கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
    • ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி-விழுப்புரம் சாலை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பேக்கரி உள்ளது.

    அந்த கடைக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஆனந்திடம் தகராறு செய்தது. அடுத்த சில நிமிடத்தில் அந்த கும்பல் ஆனந்தை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி பொருட்களை சூறையாடினர்

    உடனே அங்கிருந்த ஊழியர்கள் ஆனந்தை மீட்டனர். பேக்கரிக்குள் 8 பேர் கொண்ட கும்பல் ஊழியரை தாக்கும் சி.சி.டி.வி. வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

    இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

    பேக்கரி உரிமையாளர் சிமெண்டு வாங்கித் தருவதற்கு காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தான் உழவர் கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் பேக்கரிக்குள் புகுந்து ஊழியர் ஆனந்தை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

    கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், உழவர்கரை ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல், கடை சூறை, அடித்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உழவர்கரையை சேர்ந்த சுப்ரமணி (33) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • தனது வீட்டுக்கு செல்வதற்காக சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சென்றுள்ளார்
    • கவின் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமா மோதியது.

    சென்னிமலை, 

    சென்னிமலை அடுத்த ஓட்டப்பாறை ஊத்துக்குளி ரோடு, செந்தூர் கார்டன் பகுதிளைய சேர்ந்தவர் துரைச்சாமி (50) இவர் சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார்.

    இவர் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு தனது மொபட்டில் செந்தூர் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் சென்றுள்ளார்.

    செந்தூர் கார்டன் பிரிவு அருகே திரும்பும் போது சென்னிமலை அடுத்த வாய்ப்பாடி, சுள்ளி மேடு பகுதியைச் சேர்ந்த கவின் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமா மோதியது.

    இதில் கீழே விழுந்த துரைசாமி தலையில் பலத்த அடிபட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்
    • பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கண்ணணூர் ஊராட்சிக்குட்பட்ட வீராலிகாட்டு விளை பகுதியில் நேற்று மாலை மறைவான பகுதியில் ஒரு டெம்போவில் பேக்கரி பொருட்களை ரோட்டோரம் கொட்டி வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் டெம்போ சென்றது.

    சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ரோட்டோரம் சாக்லெட், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கொட்டி இருந்ததை கண்டு பெட்டி பெட்டியாக வீட்டுக்கு எடுத்து சென்றனர். இது அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்த பார்த்தனர். அனைத்து பொருள்களும் காலாவதி யானவை என தெரிய வந்தது.

    உடனே அந்த பகுதி மக்கள் கண்ணணூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினி விஜிலாபாய் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் மீண்டும் அதே இடத்திற்கு மற்றொரு டெம்போ காலா வதியான பேக்கரி பொருள் களை கொட்ட வந்தது. உடனே ஊராட்சி மன்ற தலை வரும், வார்டு உறுப்பி னர்கள் ஜெயா அனிதா, மற்றும் ஊர்மக்க ளும் சேர்ந்து வாகனத்தை சிறை பிடித்தார்கள்.

    உடனே திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கும், உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், கிராம நிர்வாக அதிகாரி களுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர் கள் வந்து பார்த்து ஆய்வு செய்து போது வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த பேக்கரி கடையில் உள்ள காலாவதியான பொருள்கள் என்று தெரிய வந்தது. உடனே கடை யின் உரிமையாளர் வர வழைக்கப்பட்டனர்.

    கண்ணனூர் ஊராட்சி மன்றம் சார்பாக இரண்டு டெம்போக்களுக்கும் அபராதமாக ரூ.2100 விதிக்கப்பட்டது. அந்த பணம் உடனே பேக்கரி கடை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

    தீவிர விசாரணைக்கு பிறகு அந்த கடை உரிமை யாளரிடம் காலாவதியான பொருள்கள் அனைத்தும் அழிக்க வேண்டும் என்று எழுத்து பூர்மாக அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

    சுமார் 3, 4 ஆண்டுகளாக ஒரு பேக்கரி கடையில் இவ்வளவு காலாவதியான பொருட் களை எப்படி பாது காத்து வைத்தார்கள் என்பது குறித்து உடனே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே மாதிரி மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரி கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்கவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • திண்டிவனத்தில் பேக்கரி கடையை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    • கல்லாவில் இருந்த 75 ஆயிரம் பணம் சமோசா,உயர்தர கேக் வகைகள் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    விழுப்புரம்:

    திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் முருகன் (வயது44).இவர் திண்டிவனம் செஞ்சி ரோடு அருகே பாரதி வீதியில் சதீஷ் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் 3 நாட்களுக்கு முன்பு ஆடி கிருத்திகை முன்னிட்டு தனது சொந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அந்த கடையை மேலாளர் முருகன்பார்த்து வருகிறார்.இவர் வழக்கம் போல கடையை இரவு 10 மணிக்கு பூட்டிவிட்டு சென்ற மீண்டும் காலையில் வந்து பார்க்கும்போது சொட்டர் பூட்டு உடைக்கப்பட்டு ஸ்வெட்டர் திறந்து இருந்ததை பார்த்து கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே வந்து பார்த்தபோது கல்லாவில் இருந்த 75 ஆயிரம் பணம் சமோசா,உயர்தர கேக் வகைகள் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து  மேலாளர் முருகன் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து திண்டிவனம் ஏ.எஸ்பி. அபிஷேக் குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் கொள்ளையர்கள் அங்கிருந்து சமோசா, பப்ஸ்,பாதாம் கேக், போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×