என் மலர்
நீங்கள் தேடியது "ஆடி வெள்ளி விழா"
- 1008 சிவாலயங்கள் 108 விஷ்ணு திவ்ய தேசங்கள் சென்று வழிபாடு செய்த பலன் உண்டாகும்
- கமண்டல நதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்படுகிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி வெள்ளி விழா நாளை தொடங்கி 7 வாரங்கள் நடைபெற உள்ளது.
64 சக்தி பீடங்களில் ஒன்றாக அம்மன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் அம்மன் சிரசு சுயம்புவாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
கருவறையில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்த பாணலிங்கம், ஜனாஆகர்ஷன சக்கரமும் அமைந்துள்ளது. ஜமதக்னி முனிவர் யாகம் செய்த இடத்தில் வருடந்தோறும் ஆனி திருமஞ்சனத்தன்று வெட்டி எடுத்து வரப்படும் மண்ணே இச் சன்னதியில் திருநீராக வழங்கப்படுகிறது.
இங்கு வழிபாடு செய்தால் 1008 சிவாலயங்கள் 108 விஷ்ணு திவ்ய தேசங்கள் சென்று வழிபாடு செய்த பலன் உண்டாகும் என ஞானியர்கள் கூறியுள்ளனர்.
ரேணுகம்பாள் கோவிலில் நாளை 21-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 1-ந்தேதி வரை 7 ெவள்ளிக்கிழமைகளில் ஆடிவெள்ளி திருவிழா நடைபெற உள்ளது.
இதைமுன்னிட்டு வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை படவேடு கமண்டல நதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது.
இவ்விழா நடைபெறும் முதல் வெள்ளி இரவில் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் வீதி உலாவும், 2-வது வெள்ளி 28-ந் தேதி இரவு சிம்ம வாகனத்தில் துர்க்கை அலங்காரத்திலும், 4.8.23-ந்தேதி இரவில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்கன பூஜை அலங்காரத்திலும், 4-வது வெள்ளி 11-ந் தேதி நாக வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரத்திலும், 5-வது வெள்ளி 18-ந் தேதி இரவில் குதிரை வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும், 6-வது வெள்ளி 25-ந் தேதி முத்து ரதத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், செப் 15-ந் ேததி 7-வது வெள்ளியன்று உற்சவம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) இ.ஜீவானந்தம், செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- பெண்களுக்கு தாலி மற்றும் வளையல் இலவசமாக வழங்கப்பட்டது
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி விழா நடைபெற்றது.
இதில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது. ஆடி வெள்ளியில் ஸ்ரீமுத்து மாரியம்மனுக்கு அலங்காரம் செய்திருந்தனர்.
இந்த அலங்காரத்தை காண சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சிறுவர்கள் பெண்கள் மற்றும் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் ஸ்ரீ வரலட்சுமி விரதம் முன்னிட்டு கலந்து கொண்ட திருமண ஆன பெண்களுக்கு தாலி மற்றும் வளையல் இலவசமாக வழங்கப்பட்டது.
ஆடி வெள்ளி விழா முன்னிட்டு வாணவேடிக்கை நடைப்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் சக்திவேல் மற்றும் சந்தைக்கோடியூர் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
- சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளி விழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.
ஆடி முதல் வெள்ளி விழா முன்னிட்டு முத்து மாரியம்மனை சரஸ்வதி அலங்காரம் செய்திருந்தனர். இந்த அலங்காரத்தை காண சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் சக்திவேல் மற்றும் சந்தைக்கோடியூர் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.