என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவ முகாம். MEDICAL CAMP"
- கையுன்னி அருகே போத்துகொல்லி, மங்கரை உள்பட பல ஆதிவாசி காலனிகள் உள்ளன.
- முகாமில் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடலூர்:
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கையுன்னி அருகே போத்துகொல்லி, மங்கரை உள்பட பல ஆதிவாசி காலனிகள் உள்ளன.
இங்கு கூடலூர் கோட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவுபடி சேரம்பாடி வனத்துறையினரும், சுகாதாரத்துறையினரும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினர். இதற்கு உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி தலைமை தாங்கினார். வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கலந்துகொண்ட ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வேட்டை தடுப்பு காவலர்களும் கலந்துகொண்டனர்.
- மக்களுக்கு மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், எலும்பு. கண், காது, மூக்கு, தொண்டை, ரத்தம், ரத்தஅழுத்தம், சர்க்கரையின் அளவு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் செய்தனர்
- முகாமில் 460க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.
திருச்சி :
தா.பேட்டை அருகே பாப்பாபட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தா.பேட்டை ஒன்றிய குழு துணைத்தலைவர் மல்லிகா பெரியசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன், கே.பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.மயில்வாகனன், நிர்வாகி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஆணையர்கள் ஆர்.மனோகரன், ஆர்.பி.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ஜெகநாதன், துணைத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் மருத்துவ முகாமின் நோக்கம் குறித்து பேசினர்.
முகாமில் மக்களை தேடி மருந்து பெட்டகங்கள் வழங்கபட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.குமரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், எலும்பு. கண், காது, மூக்கு, தொண்டை, ரத்தம், ரத்தஅழுத்தம், சர்க்கரையின் அளவு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் செய்தனர். முகாமில் 460க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.
முடிவில் ஊராட்சி செயலர் ஜெயராஜ் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்