search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில்"

    • முகமூடி கொள்ளையன் அட்டகாசம்
    • கொள்ளையன் உருவம் காமிரா பதிவில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கேப் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏபிமோசஸ் (வயது 44). இவரது மனைவி மெர்சி. ஹோமியோபதி டாக்டரான இவர் கேப் ரோடு பகுதியில் கிளினிக் வைத்துள்ளார்.

    டாக்டர் மெர்சி தினமும் கிளினிக்கில் நோயாளிகளை பார்ப்பது உண்டு. அதன்படி கிளினிக் வந்த அவர், பணிகள் முடிந்ததும் வழக்கம்போல் கிளினிக்கை பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று காலையில் மெர்சி கிளினிக்கிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. எனவே யாரோ மர்ம மனிதன், உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இது பற்றி கோட்டார் போலீசில் ஏபிமோசஸ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கிளினிக்கில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் மென்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஏபிமோசஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையன் உருவம் காமிரா பதிவில் சிக்கி இருப்பது தெரியவந்தது. கொள்ளை யன் ஒருவன் முகமூடி அணிந்து செல்வது போன்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் நடந்த சில திருட்டு சம்பவங்களிலும் கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கைவரிசையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த கொள்ளையிலும் அவர்கள் தான் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது.
    • பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிபள்ளம் ஆகிய உபமின் நிலையத்தில் வருகிற 15-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, கோர்ட் ரோடு, கே.பி. ரோடு, பால்பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், பூதப்பாண்டி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையார்விளை, காரவிளை, வைராகுடி, திட்டுவிளை, சீதப்பால், தோவாளை, நாவல்காடு, வெள்ளமடம், பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, அனந்த நாடார்குடி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராபின் இவரது மகன் ஆல்வின் ராஜ் (வயது 10).

    ஆசாரிபள்ளம் நடு தெருவை சேர்ந்தவர் ஹர்ஜோன் (10). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் ஆல்வின்ராஜ், ஹர்ஜோன் இருவரும் அவருடைய நண்பர் இம்மானுவேல் (10) என்பவருடன் அந்த பகுதியில் சுற்றி திரிந்தனர். மதியம் அந்தோணியார் ஆலயம் பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றனர்.

    ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் குளத்தில் இறங்கி மீன் பிடித்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி னார்கள். இதையடுத்து பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆல்வின் ராஜ் ஹர்ஜோ னை பரிசோ தித்த டாக்டர்கள் இருவ ரும் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இது குறித்து ஆசாரிப்பள் ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆல்வின் ராஜ் ஹர்ஜோன் பலியானது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் திடுக்கிடும் தகவல் கள் வெளியாகி உள்ளது. தண்ணீரில் மூழ்கி பலி யான ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் குளத்தின் கரையில் நின்று மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் மீன்கள் சிக்க வில்லை.

    இதையடுத்து குளத்திற் குள் இறங்கி அவர்கள் மீன் பிடித்தனர். அதன்பிறகும் மீன் சிக்காததால் தண்ணீ ருக்குள் இறங்கி சென்றனர். அப்போது கரையில் இருந்த இம்மானுவேல் ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.அதற்குள் ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் தண்ணீ ரில் மூழ்கி உள்ள னர். இதை பார்த்த இம்மானு வேல் கூச்சலிட்டு உள்ளார்.

    அப்போது அந்த பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. பலி யான ஆல்வின் ராஜ், ஹர் ஜோன் உடல் பிரேத பரிசோ தனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு உள்ளனர்.

    • மக்களுக்கு இலவசம் வழங்கக் கூடாது எனக் கூறும் பா.ஜனதா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை கருத்தில் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகிறது.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள 3 பஸ் நிலையங்களும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடந்தது.

    விழாவிற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பஸ் நிலையங்கள் புணரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் தலை நகராக நாகர்கோவில் விளங்கி வருகிறது. இந்த மாநகராட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக ரூ.8 கோடி மதிப்பில் இங்குள்ள 3 பஸ் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் ஆகியவை தலா ரூ. 2 கோடி மதிப்பிலும், கிறிஸ்டோபர் பஸ் நிலையம் ரூ. 4 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட உள்ளது.

    இந்தப் பணிகள் முடியும் போது பஸ் நிலையங்கள் பொதுமக்கள் பயன்படுத்தவும் பார்க்கவும் மிக நன்றாக அமையும்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சர்வர் பிரச்சினை ஏற்படுவதாக கூறுகின்றனர். கடந்த காலங்களில் முறையாக பராமரிக்காமல் விட்டதால் தான் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

    தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 1½ ஆண்டுகளில் பல்வேறு சர்வர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. விரைவில் அனைத்து நிலைகளும் சரியாகும்.

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் அரசு எடுக்கும் முடிவை காலதாமதம் செய்யும் தவறான முன்னுதாரணம் வருத்தம் அளிக்கிறது. மக்களை பாதிக்கக் கூடிய வகையில் கவர்னர் கிடப்பில் போட்டு இருப்பதின் உள்நோக்கம் குறித்து பா.ஜனதா தலைவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    மக்களுக்கு இலவசம் வழங்கக் கூடாது எனக் கூறும் பா.ஜனதா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை கருத்தில் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகிறது. அவர்கள் இந்த இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினியர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. கலை இலக்கிய பகுத்த றிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம், ஒன்றிய செயலாளர் மதியழகன், செயற்குழு உறுப்பினர் சதா சிவம், மாநகர செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானார் வந்து மனு கொடுத்து செல்கி றார்கள். மற்ற நாட்களிலும் பொது மக்களும், அரசியல் கட்சியினரும் மனு அளிக்க வருகிறார்கள்.

    மனு அளிக்க வரும் பொது மக்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடந்து வரு வதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அலுவலகத்தின் முன் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரு பவர்களை சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் பெண் போலீ சாரும் ஈடுபட்டு உள்ளனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்க ளது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது. மேலும் உணவு அருந்துவதற்கும் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

    இந்த நிலையில் போலீ சாருக்கு கலெக்டர் அலுவல கத்தின் முன் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதி யில் காலியாக இருந்த அறை ஒன்று போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடு படும் போலீசார் அந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இன்று காலை முதல் அந்த அறை யில் போலீசார் தங்களது உடமைகளையும், பொருட்களையும் வைத்தி ருந்தனர். மழை மற்றும் வெயில் நேரங்களில் இந்த அறை எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • கடைக்காரர் சரி செய்து கொடுக்காததால் மன உளைச்சல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகர்.

    இவர் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள ஒரு கடையில் கியாஸ் அடுப்பு வாங்கியுள்ளார். ஆனால் அதை சரியாக அமைக்காததால் கியாஸ் அடுப்பில் கரையான் ஏற்பட்டுள்ளது. எனவே இதை சரிசெய்து தரும்படி கடைக்காரரை அணுகியுள்ளார்.

    கடைக்காரர் சரி செய்து கொடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயசேகர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இந்த நிலையில் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதை ஜெயசேகருக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 மற்றும் அபராத தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு
    • சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் ரதவீதி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் பிள்ளை (வயது 75). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்தார். கோட்டாறு கம்பளம் பகுதியில் சுந்தரம் பிள்ளை நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற அரசு அவர் மீது மோதியது.

    இதில் சுந்தரம் பிள்ளை படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுந்தரம் பிள்ளை இறந்தார்.இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுந்தரம்பிள்ளை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அரசு பஸ் எது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சுந்தரம் பிள்ளையின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    • பிரபா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட பிரபா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இளங்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ரமீஹா. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    குலசேகரத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பிரபா. இவர் என்னிடம் தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறினார். பின்னர் அதற்கு பணம் கேட்டார். இதையடுத்து நான் பல தவணைகளாக ரூ.1 கோடியே 25 ஆயிரம் கொடுத்தேன்.ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை.

    இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டபோது தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தார். பின்னர் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.

    இதையடுத்து நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திரும்ப தரவில்லை. எனவே பிரபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற் கொண்டனர்.

    விசாரணையில் பிரபா பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து பிரபா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ×