search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமான தொழிலாளி"

    • மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றிய தொழிலாளி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார்.
    • மாயமான தொழிலாளி கல்குவாரியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா(45). இவர் வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றி திரிந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார். இதனைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காட்டு ராஜாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் காட்டுராஜா பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தேவதானப்பட்டி போலீசார் காட்டுராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை
    • அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே தெற்கு கைலாச விளை, மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சித்திரை. இவரது மூத்த மகன் சிங் (வயது 33),கட்டிட தொழிலாளி. 2-வது மகன் ராஜகுமார். 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிங், அடிக்கடி மது குடித்துள்ளார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக சுமார் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சிங்கை தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சிங் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை சித்திரை மற்றும் குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அங்கு அழுகிய நிலையில் சிங் பிணமாக கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிங் உடலைக் கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த நிலையில் கொடுமுடி அருகே பனப்பாளையம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் சாவுக்கான காரணம் என்ன என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே பாசூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜா (48) தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. தனதுதாயார் துளசி மணியுடன் வசித்து வந்தார்.

    இவர் கடந்த 20-ந் தேதி இரவில் இருந்து காணவில்லை. இவரை தேடிப்பார்த்த போது பாசூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் பாலம் அருகே சதீஷ்குமாரின் மொபட் மட்டும் அனாதையாக நின்று கொண்டு இருந்தது. இதனால் காளிங்கராயன் வாய்க்காலில் விழுந்து இருப்பாரோ என்ற சந்தேகத்தில் இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாசூர் பகுதியில் இருந்து பழனிக்கவுண்டன் பாளையம் வரையில் காளிங்கராயன் வாய்க்காலில் 21-ந்தேதி காலை முதல் மாலை வரை தேடினர்.

    இதேபோல் கொடுமுடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பழனிக் கவுண்டம்பாளையம் முதல் கொடுமுடி வரை காளிங்கராயன் வாய்க்காலில் தேடியதில் எங்குமே உடல் கிடைக்க வில்லை.

    இந்த நிலையில் கொடுமுடி அருகே பனப்பாளையம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்ததனர்.

    விசாரனையில் அது மாயமான சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் உடல் தான் என தெரிய வந்தது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் சாவுக்கான காரணம் என்ன என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். போலீசார் இறந்த சதிஷ் குமாரின் உடலை கொடுமுடி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைத்தனர்.

    ×