என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொள்ளையர்களை"
- திருவதிகை அணைக்கட்டில் கெடிலம் ஆற்றங் கரையில் அய்யனார் கோவில் உள்ளது.
- இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
கடலூர்: பண்ருட்டி அருகே திருவதிகை அணைக்கட்டில் கெடிலம் ஆற்றங் கரையில் அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.பூஜைகள் செய்து விட்டு கோவிலை பூட்டிய பூசாரி வழக்கம் போல வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோவிலை வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோவிலுக்குள் சென்று பார்த்த போது, கோபுரத்தில் 4 ஐம்பொன் கலசங்கள், நீர் மோட்டர் ஓயர், உண்டியல் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டி ருந்தது.இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.பண்ருட்டி போலீசார் இந்த கொள்ளையர்க ளையும் விரைந்து பிடிக்க வேண்டும். அவர்களிடம் உள்ள 4 கலசங்களை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஓப்படைக்க வேண்டுமென ஆன்மீகவாதிகள் எதிர் பார்க்கின்றனர்.
- நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
- அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையத்தில் முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவில்களின் நடை தினமும் காலை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
இதே போல் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம் போல் கோவில்களை திறக்க வந்த பூசாரிகள் 2 கோவில்களின்
உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ 25,000 திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்களும் வந்து பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் இதற்கு முன்பு கோவில்களில் கைவரிசை காட்டியவர்கள் பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்