என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கமிஷனர் எச்சரிக்கை"
- திருச்சியில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
- கடந்த 9 மாதங்களில் மட்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
திருச்சி:
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 9 மாதங்களில் மட்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கடந்த 2020-ம் ஆண்டு 40 பேர் மீதும், 2021-ல் 85 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதே நேரம் இந்த 9 மாதங்களில் மட்டும் 142 பேர் குண்டர் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்த 170 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 651 நபர்கள் மீதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்த 90 பேர் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 115 பேர் மீதும், சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1,124 பேர் மீதும் மற்றும் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 9,857 பேர் மீதும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளது. திருச்சி மாநகரத்தில் சட்டம், ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள் வழிப்பறி குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ளது.
- அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி குறுஞ்செய்தி அனுப்புவதாக தெரிய வருகிறது.
- போலியான குறுஞ்செய்தியை யாரும் பொருட்படுத்த வேண்டாம்.
திருப்பூர்
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் கூறியிருப்பதாவது:- போலீஸ் டி.ஜி.பி. என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக குறுஞ்செய்தி அனுப்புவதாக தெரிய வருகிறது.இந்த போலியான குறுஞ்செய்தியை யாரும் பொருட்படுத்த வேண்டாம். அந்த நபரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு போலீசார் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்காக மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
- திண்டிவனம் பகுதியில் பொது மக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் என்று நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.
- கொரோனா விதிமீறல்களை கடைபிடித்தல் அவசியம் ஆகிய அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
விழுப்புரம்:
தமிழக அரசு கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தவும், கட்டாய முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல், உரிய காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், வியாபாரப் பெருமக்கள், பொதுமக்கள், கொரோனா விதிமீறல்களை கடைபிடித்தல் அவசியம் ஆகிய அறிவுரைகள் வழங்கி உள்ளார். அதனடிப்படையில் திண்டிவனம் பல்வேறு பகுதியில் முக கவசம்அணிவதையே வலியுறுத்தியும் தடுப்பூசிகள் செலுத்தித்துக்கொள்ளவும், மீறுவோர் மீது பொது சுகா–தார சட்டத்தின் படி நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப் படும் என்று திண்டிவனம் நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்