என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளம் பெண்கள்"
- சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
- வீடியோவிற்கு அந்த இளம் பெண்களின் நண்பர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகரில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை முதலே சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் காலை 10 மணி முதலே அனல் காற்று வீச தொடங்குகிறது. மதியம் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு கரு மேகங்கள் திரண்டு காணப்படுகிறது. சில நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு லேசான சாரல் மழை பெய்தது. அப்போது பார்வதிபுரத்தில் உள்ள மேம்பாலத்தில் அமைந்திருக்கும் பஸ் நிறுத்தம் அருகே கொட்டும் மழையில் பனியன் டி-ஷர்ட் அணிந்த 2 பெண்கள் நடனம் ஆடினார்கள்.இதை பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு அந்த இளம் பெண்களின் நண்பர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- இளம்பெண்கள் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது.
- இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
சென்னை:
எங்கே செல்லும் இந்த பாதை... யாரோ யாரோ அறிவாரோ... என்கிற பாடலை நினைவுபடுத்தும் வகையில் சென்னையில் இளம்பெண்கள் நடுரோட்டில் போதையில் தள்ளாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோயம்பேடு பகுதியில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் சாலையில் சென்னை மாநகராட்சி சிக்னல் சந்திப்பில் ஒரு கருப்பு நிற காரில் 4 இளைஞர்களும், 3 இளம்பெண்களும் வந்து இறங்கினர். அனைவரும் புத்தாண்டு மது விருந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததை அவர்கள் அணிந்திருந்த ஆடை உணர்த்தியது.
3 பெண்களும் கவர்ச்சியாக அரை குறை ஆடையை அணிந்திருந்தனர். 3 பேருமே போதையில் தள்ளாடிய நிலையில், ஒருவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இரவில் நடனம் ஆடிய கவர்ச்சி உடையிலே அந்த 3 பெண்களும் வந்திருந்தனர். 'வாந்தி' வருகிறது என ஒரு பெண் கூறியதாலேயே வாலிபர்கள் காரை ஓரமாக நிறுத்தி உள்ளனர். இதையடுத்து போதை பெண் கீழே இறங்கினார்.
அவர் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது. பின்னர் 4 இளைஞர்களும், 3 பெண்களையும் காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.
மது குடிப்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிற நிலைமை மாறி இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். 'ஆணுக்கு பெண் சமம்' என்பது இது தானோ...
- கவர்ச்சிகரமாகவோ ஆபாசமாகவோ இளம் பெண்கள் வீடியோக்களை பதிவு செய்யக் கூடாது
- நாம் விளையாட்டுக்காக எடுக்கும் வீடியோக்கள் கடைசியில் வினையில் போய் முடிந்து விடும்.
உள்ளங்கையில் தவழும் செல்போனில் தற்போது உலகத்தையே காண முடிகிறது. செல்போன் மூலமாக விரும்பும் அனைத்தையும் நாம் இருக்கும் இடத்துக்கே கொண்டுவர முடிகிறது. மின்சார கட்டணத்தில் தொடங்கி சினிமா டிக்கெட் எடுப்பது வரை அனைத்தையும் செல்போன்கள் மூலமே பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.
இப்படி செல்போன்கள் நமது அன்றாட பயன்பாட்டு பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு இடத்துக்கு தேடிச் சென்றுதான் ஒரு வேலையை செய்து முடிக்க முடியும் என்கிற நிலையும் மாறி விட்டது.
செல்போன்கள் இன்றைய அவசர உலகில் நாம் வேகமாக ஓடுவதற்கு உற்ற துணைவனாகவே மாறி உள்ளது என்றால் அது மிகையாகாது. இப்படி செல்போன்களின் பயன்பாட்டை சொல்லிக் கொண்டே செல்லலாம். அந்த வகையில் இன்று கிராமத்தில் தொடங்கி நகர்ப்புறங்கள் வரையில் செல்போன்கள் இல்லாதவர்களே இல்லை என்கிற நிலை ஏற்பட்டு விட்டது.
நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்பட வேண்டிய செல்போன் தற்போது நமக்கே வேட்டு வைப்பதாக மாறி இருக்கிறது. செல்போன்களில் தங்களை அழகழகாய் படம் பிடித்து ரசிக்கும் இன்றைய இளம் பெண்கள் பலர், அதன் பின்னால் ஒளிந்து கிடக்கும் பேராபத்தை எப்போதுமே உணர்வதில்லை. குறிப்பாக இன்றைய இளம்பெண்கள் மத்தியில் செல்போன் மோகம் என்பது எல்லை மீறும் அளவுக்கு சென்று விட்டது என்று எச்சரிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீசார்.
விளையாட்டாக எடுத்துவிட்டு அதனை பார்த்து ரசித்த பின்னர் அழித்து விட்டால் எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு இன்றைய இளம் பெண்கள் பலர் தங்களை எப்படியெல்லாம் படம் பிடிக்க கூடாதோ அப்படி எல்லாம் படம் பிடித்தும் வீடியோக்களை பதிவு செய்தும் ரசித்து வருகிறார்கள். குறிப்பாக சினிமா கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் வகையில் தங்களை விதவிதமாக வீடியோவில் பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இணைய தளங்களின் பக்கம் நாம் சாதாரணமாக உலாவினாலே போதும், விதவிதமான வீடியோக்கள் வந்து விழுகின்றன. நாம் தேடிச் செல்லாமலேயே இணைய தளங்கள் மூலம் ஏராளமான ஆபாச வீடியோக்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக கணவன்- மனைவி இருவரின் அந்தரங்க விஷயங்களை ஊரே பார்க்கும் வகையிலான வீடியோக்களும் கண்ணை கூச செய்யும் வகையில் குவிந்து கிடக்கின்றன. இது போன்ற வீடியோக்கள் சமீப காலமாகவே சமூக வலைத் தளங்களை அதிகமாக ஆக்கிரமித்து வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் செல்போன்களில் யூடியூப் வீடியோக்களை பார்ப்பதை பொழுது போக்காகவே கொண்டு உள்ளனர். இது போன்ற நேரங்களில் நல்ல விஷயங்களை தேடி இளைஞர்கள் பார்த்தாலும் ஏதோ ஒரு வகையில் அவர்களை சுண்டி இழுக்கும் கவர்ச்சிகரமான வீடியோக்களையும் காண நேரிடுகிறது.
இப்படி இளைய சமூகம் கெட்டுப் போவதற்கு ஆபாச இணையதளங்கள் பெருமளவில் பெருகி கிடக்கின்றன. இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆபாச இணைய தளங்களை மத்திய-மாநில அரசுகள் முடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 800 ஆபாச இணைய தளங்களும் கடந்த ஆண்டு 60 இணைய தளங்களும் முடக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எண்ணிக்கை என்பது பெருங்கடலில் ஒரு குடம் தண்ணீரை அள்ளியது போன்று தான் என்கிறார்கள் இணையதளவாசிகள். அந்த அளவுக்கு உலகம் முழுவ திலும் இருந்து இயக்கப்படும் ஆபாச இணையதளங்களில் கோடிக்கணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன.
இது போன்ற இணைய தளங்களை முடக்கி வைப்பது என்பது நாடு முழுவதுமே சைபர் கிரைம் காவலர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. ஒரு இணையதளத்தை முடக்கினால் புதிதாக நூறு இணைய தளங்கள் புற்றீசல்கள் போல முளைக்கின்றன. இதனால் இது போன்ற இணையதளங்களை இனி முற்றிலுமாக முடக்க முடியுமா? என்பது பெரிய கேள்வியாகவே எழுந்துள்ளது. ஆபாச வீடியோக்களை பொருத்த வரையில் ஒரு காலத்தில் அது மிகவும் ரகசியமான தாகவே இருந்து வந்தது.
கேசட் மற்றும் சிடி வடிவில் இருந்து வந்த இந்த வீடியோக்கள் தற்போது நாம் பயன்படுத்தும் செல்போன்களில் நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது. எனவே இன்றைய இளம் தலைமுறை மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக நாம் விளையாட்டுக்காக எடுக்கும் வீடியோக்கள் கடைசியில் வினையில் போய் முடிந்து விடும். எனவே எக்காரணம் கொண்டும் கவர்ச்சிகரமாகவோ ஆபாசமாகவோ இளம் பெண்கள் வீடியோக்களை பதிவு செய்யக் கூடாது என்பது போலீசாரின் தொடர் அறிவுரை யாகவே இருந்து வருகிறது.
ஆனாலும் இன்றைய இளம் பெண்கள் அதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை. இணைய தளங்களில் உலா வரும் ஆபாச செல்பி வீடியோக்களே இதற்கு மிகப்பெரிய உதாரணமாக உள்ளன. தொழில் ரீதியாக தயாரிக்கப்படும் ஆபாச வீடியோக்களுடன் குடும்ப பெண்கள் இருக்கும் ஆபாச வீடியோக்களும் போட்டி போட்டுக் கொண்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த வீடியோக்களை பார்க்கும்போது இப்படியும் வீடியோக்கள் எடுக்க முடியுமா? என்று சைபர் கிரைம் போலீசார் வேதனையோடு பல்வேறு தகவல் களை தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் உயர் அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இன்றைய காலகட்டங்களில் சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யூடியூப் சேனல்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன இது போன்ற யூடியூப் சேனல்கள் வழியாகவே இளம் பெண்கள் தங்களை சினிமா ஹீரோ யினாக கருதிக் கொண்டு பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் தாங்கள் மட்டுமே பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பல பெண்கள் எடுத்த அருவருக்கத்தக்க வீடியோக்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ளன.
இந்த வீடியோக்கள் எப்படி பரவுகிறது என்று பார்த்தால் அவர்களே அதற்கு காரணமாக இருந்திருப்பார்கள். ஆபாச வீடி யோக்கள் பதிவு செய்யப் பட்ட செல்போன்கள் பழுதாகும் நேரங்களில் அவைகளை எல்லாம் டெலிட் செய்து விட்டு பழுது நீக்குவதற்காக கடை களில் கொடுத்திருப்பார்கள்.. இதுபோன்ற நேரங்களில் பல கடைக்காரர்கள் ரெக்கவரி சாப்ட்வேர் போட்டு அதில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வமாக இருப்பார்கள்.
அப்படி ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் வெளியாகும் ஆபாச வீடியோக்களே இன்று அதிகமாக சமூக வலைத் தளங்களை ஆக்கிரமித்து உள்ளன. எனவே செல்போன் பழுதானால் அதனை தூக்கி வீசி எறிந்து விட்டு வேறு செல்போன்களை மாற்றி விடுவது நல்லது. இல்லையென்றால் அருவருக்கத்தக்க வகையிலான வீடியோக்களை செல்போன்களில் பதிவு செய்யாமல் இருப்பது நல்லது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
உங்களது இளம் வயது மகன் அல்லது மகள் கைகளில் இருக்கும் செல்போன்கள் எப்போது வேண்டுமானாலும் ஆபத்தில் முடியலாம். உஷாராக இருங்கள்.
- 3 இளம்பெண்கள் மாயமாகினர்.
- பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
விருதுநகர்
ராஜபாளையம் ஜமீன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கனிசெல்வம். இவரது மனைவி தையல் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை.
தேபோல் ராஜபாளையம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த முத்துக்குட்டி என்பவரது மகளும் மாயமானார். ராஜபாளையம் அழகாபுரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கடந்த 24-ந் தேதி குரூப்-4 தேர்வு எழுதச்சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேற்கண்ட மாயம் தொடர்பான சேத்தூர், தளவாய்புரம், கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்