search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு வரி"

    • வேலைக்கு முறையான ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்காமல் காலதாமதம் செய்கிறார்கள்.
    • வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சம்பளம் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஊராட்சி துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை பணியாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சம்பளப்பணம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து 100 நாள் பணியாளர்கள் கூறும்போது, வேலைக்கு முறையான ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்காமல் காலதாமதம் செய்கிறார்கள். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.

    • இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
    • கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    மேற்காணும் அறிவிப்புகளுக்கு இணங்க கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள், செலுத்த வேண்டிய வீட்டுவரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இவ்விணைய தளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன.

    இவ்விணையதளத்தின் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கீழ்காணும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்த இயலும்.

    வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் என அனைத்து கட்டிட அனுமதிகளும் இணைய வழியாக மட்டுமே தரப்பட வேண்டும். இதற்காக http://online.ppa.tn.gov.in/ என்ற முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது.

    ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கிடும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அதிகாரிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலம்தான் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர்.
    • அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதற்கான வரியினங்களை நிர்வாகத்தினர் தீவிரமாக வசூலிப்பதற்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் மைக் மூலம் வரியினங்களை செலுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த 91 வயதான ராஜாமணி என்ற மூதாட்டி நடக்க முடியாத நிலையிலும் கையில் கம்பு ஊன்றியபடி அவினாசி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது வீட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி ரசீது பெற்று சென்றார். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபணத்தை அந்தந்த காலகெடுவுக்குள் கட்டுவது நமது கடமை. அதை கட்டாமல் இருந்தால் பெரும் குறையாக எனக்கு தோன்றும். வரித்தொகையை கட்டிமுடித்ததில் நான் திருப்தியடைந்தேன் என்று கூறி அங்கிருந்த அலுவலர்களை இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து புறப்பட்டு சென்றார். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வரியினங்களை செலுத்த காலம் கடத்தும் நிலையில் நடை தளர்ந்த நிலையிலும், அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.

    • வீட்டு வரி செலுத்தியவர்களிடம் மட்டுமே மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
    • இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வசூலிக்க வேண்டிய வீட்டு வரி சரியாக வசூலாகிவிடும். ஊராட்சியும் சிறப்பாக செயல்படும்.

    மதுரை

    மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் லட்சுமி சந்திரசேகர். இவர் இப்பகுதி வாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வழங்கி வருவதுடன் தொலைநோக்கு சிந்தனையுடன் பல திட்டங்க ளையும் இப்பகுதிகளில் நிறைவேற்றி யுள்ளார்.

    குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தங்களது சொந்த செல வில் ஆசிரியர்களை தேர்வு செய்து வீடுகளில் முடங்கி கிடக்கும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

    மேலும் மாணவ- மாணவி களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்கி தந்தும் ஆசிரியர்களுக்கு தங்களது சொந்த செலவில் சம்பளம் வழங்கியும் சேவை செய்திருந்தார்.

    எனவே இதுபோன்று தொலைநோக்கு சிந்தனை யுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் சாதனைகளை செய்து வந்த லட்சுமி சந்திரசேகர் சமீபத்தில் திண்டியூர் ஊராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியினை அரசு உத்தரவு பணி செயல்படுத்தினார். அப்போது அரசு நிர்ணயித்த தொகை ரூ.20 லட்சம் போக தனது சொந்த பணம் ரூ.13 லட்சத்தை அலுவலகத்துக்கு செலவு செய்து அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பாராட்டை பெற்றார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர் லட்சுமி சந்திரசேகர் ஊராட்சியில் வீட்டு வரி, தொழில்வரி, குழாய் வரி போன்ற வரிகளை வசூலிக்க பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும், சில வீடுகளில் கணவன்-மனைவி இருவரும் அரசு மற்றும் தனியார் வேலை களில் உள்ளதால் வேலை நாட்களில் ஊராட்சி பணியாளர்கள் வரி வசூலிக்க முடியவில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்த நினைத்தாலும் அவர்களாலும் வரி செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தற்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    இது போன்று வரிப்பாக்கிகளை வசூலிக்க ஒரு அருமையான வழி உள்ளது. அரசு தற்போது வீட்டு வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் என்ற உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் வீட்டு வரி, குழாய் வரி ஏன் மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் பாதாள சாக்கடை வரி மற்றும் வருமான வரி போன்றவைகளை பாக்கி வைத்துள்ளனர். ஆனால் யாரேனும் மின்சார வரியை பாக்கி வைத்திருக்கி றார்களா? என்றால் இல்லை.

    எனவே மக்களுக்கு அவசியம் தேவைப்படுவதி னால் மின்சார வரியை மட்டும் சரியாக செலுத்துகிறார்கள் என்ப தால் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வீட்டு வரிகளே செலுத்திய நபர்களுக்கு தான் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணம் வசூலிக்க வேண்டும். அப்படி வீட்டு வரி உள்ளிட்ட பிற வரிகளை செலுத்தாத நபர்களுக்கு மின் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

    மின் கட்டணம் செலுத்த வில்லை என்றால் மின்சாரம் தடைபடும் என்பதால் மக்கள் வீட்டு வரி உள்ளிட்ட பல வரி களை சரியாக செலுத்தி விடுவார்கள். இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வசூலிக்க வேண்டிய வீட்டு வரி சரியாக வசூலாகிவிடும். ஊராட்சியும் சிறப்பாக செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஜிஎஸ்டி., எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும்.
    • ஆவணங்களை இணைக்க நகராட்சி சேவை மையத்தில் நேரில் வழங்கலாம்.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சியில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டு வரி எண்ணுடன் ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சிப் பகுதிக்குள் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டு வரி எண்ணுடன் ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை இணைக்க வேண்டும்.

    தொழிற்கூடம் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஜிஎஸ்டி., எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும்.

    வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தால் வீட்டின் உரிமையாளரது ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை பெற்று இணைக்க வேண்டும். மேற்கண்ட ஆவணங்களை இணைக்க நகராட்சி சேவை மையத்தில் நேரில் வழங்கலாம். அல்லது 75980-59898 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தங்களது விவரங்களை தெரிவித்து, இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • த.மா.கா. சார்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மின்சார உயர்வு மற்றும் வீட்டு வரி ரத்து செய்யக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி. அறிவுறுத்தலின் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் அரிதாஸ், தலைமையில் மனு வழங்கினர்.

    இதில் அரக்கோணம் நகரத் தலைவர் கே.வி.ரவிச்சந்திரன், ஒன்றிய தலைவர் கே.எஸ்.ஆர்.கிரிராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் காந்தி ராஜ், வானம்பாடி தயாளன், காசிநாதன், ஒன்றிய செயலாளர் எல்.தேவேந்திரன், ராஜேஷ், கார்த்திகேயன், அம்மூர் சபாபதி, மூர்த்தி, சம்பந்தம், ஆனந்தபாபு, சரவணன், இளையராஜா, நாராயணன், அம்முர் கோபி, பாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் நகர ஒன்றிய போரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×