search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல்லத்தில்"

    • சுகவனேசுவரர்‌ சுவாமி கோவில் ‌ வளாகத்தில்‌ அமைந்துள்ள கருணை இல்லத்தில்‌ இருந்த சுமார்‌ ரூ.5 லட்சம்‌ உலோகப் பொருட்கள் திருட்டு.
    • கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர்‌ ஒருவரும்‌ , லுங்கி மற்றும்‌ சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும்‌ அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    சுகவனேசுவரர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புடைய நெய் டின்கள், அரிசி மூட்டைகள் , உலோகப்பொருட்கள் மற்றும் ஆகியவைகள் கணக்கில் கொண்டு வரப்படாமல் இருந்தது. இதுபற்றி தகவல் அளித்ததற்கு உடனடியாக அவைகளை கைப்பற்றி ரசீது போடுவதற்கு சக பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர் ஒருவரும் , லுங்கி மற்றும் சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து உடனடியாக காவல் துறையில் விரிவான புகாரினை அளித்து, துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். கோவிலில் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னிமலை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயமானார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்த நமச்சிவாயம் (52) செயலாளராக உள்ளார்.

    இந்த இல்லத்தில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பரத் (13), ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலமாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று காலை குழந்தைகள் ஆஜர் பட்டியல் எடுத்தபோது சிறுவன் பரத் இல்லை.

    உடனிருந்த குழந்தைகளை விசாரித்தபோது அவன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நலக்குழுவுக்கும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் உதவியுடன் ஈரோடு, பெருந்துறை, அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பரத் கிடைக்கவில்லை. இதையடுத்து இல்லத்தின் செயலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×