search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெரயில்வே"

    • வடபழஞ்சி பகுதியில் புதிய உயர்மட்ட ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்களிடம் அதிகாரி உறுதியளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை-போடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தபோது வடபழஞ்சி-நாகமலை புதூர் பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.ஆனால் மழை காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் தண்ணீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ரெயில்வே சுரங்கப் பாதையை மூடிவிட்டு உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ரெயில்வே துறையிடமும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வடபழஞ்சிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழக பகுதியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் அருகே ரெயில்வே துறை ஒப்புதல் பெற்று புதிய உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்ககப்படும் என பொதுமக்களிடம் வருவாய் அலுவலர் உறுதி யளித்தார்.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சர்மிளா, மதுரை மேற்கு தாசில்தார் நாகராஜன், மண்டல துணை வட்டாட்சியர் வீரக்குமார், சர்வேயர் பழனி, வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டி மற்றும் ரெயில்வே கோட்ட பொறியாளர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென் மாவட்டங்களுக்கு பண்டிகை சீசன் சிறப்பு ெரயில்கள் விடப்படுகிறது.
    • தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, பங்குனி உத்திரம் ஆகிய பண்டிகை கள் வருகின்றன. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்களை இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்து உள்ளது.

    அதன்படி தாம்பரம்- நெல்லை இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்படுகின்றன. 4-ந் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்படு கிறது. அது மதுரைக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேரும். மதுரை யில் இருந்து புறப்படும் ெரயில் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் 5-ந் தேதி நெல்லையில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் செல்லும். இது மதுரைக்கு இரவு 8.35 மணிக்கு வரும்.

    தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்படு கின்றன. இது 6-ந் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்ப ரத்தில் இருந்து புறப்படும். மதுரைக்கு நள்ளிரவு 11.45 மணிக்கு வரும்.

    அதன் பிறகு நாகர்கோவி லுக்கு அடுத்த நாள் அதி காலை 3.35 மணிக்கு செல்லும். மறு மார்க்கத்தில் 7-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்படும் ெரயில், எழும்பூருக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும். இந்த ெரயில் மதுரைக்கு இரவு 8.55 மணிக்கு வரும்.

    12-ந் தேதி நாகர்கோவி லில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் ெரயில், தாம்ப ரத்துக்கு அடுத்த நாள் காலை 4.10 மணிக்கு செல்லும். 13-ம் தேதி தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் .

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது.
    • அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் ,வீரபாண்டி மெயின் ரோடு வேங்காம்பட்டி அருகே உள்ள ெரயில்வே கேட் பல்வேறு கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது.

    இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் வந்து

    செல்கின்றன. அதன் வழியாக ெரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சியில் கடந்த 2011 -ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டது .

    மேலும் கடந்த 2021 -ம்

    ஆண்டு மல்லூர் பேரூ ராட்சி பொதுமக்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் வேங்காம்பட்டி ெரயில்வே கேட் முன்பு

    ெரயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.

    இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் ஆத்தூர் துணைக்கோட்ட அலு வலகத்திற்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது. அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று நடைபெறவிருந்த ெரயில் மறியல் போராட்டம் தற்கா

    லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை

    அய்யனார் தெரி வித்துள்ளார். பாலம் அமைப்பதால் அந்த வழியாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் அந்த பகுதி மக்கள் மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை அய்யனாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • அதிகாலை சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு சென்று கொண்டிருந்த ெரயில் முன்பு திடீரென பாய்ந்தார்.
    • இதில் ரெயில் மோதி கலையரசன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 23). இவர் இன்று அதிகாலை சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு சென்று கொண்டிருந்த ெரயில் முன்பு திடீரென பாய்ந்தார். இதில் ரெயில் மோதி கலையரசன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் சம்பவம் குறித்து ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார், கலையரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார், விசாரணை நடத்திய போது, கலையரசன் வாழ பிடிக்காமல் ரெயின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து ெரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்கள் கலையரசனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×