search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் மோதல்"

    • குருசாமி என்பவரது மகன் ரூபானந்தன் (வயது 28) ஓட்டிக்கொண்டு சென்றார்.
    • அரசு பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பனியன் நிறுவன பஸ் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

    ஊத்துக்குளி : 

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பூசாரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் பணிபுரியும் வேலை ஆட்களை ஏற்றிக்கொண்டு ஊத்துக்குளி பாப்பம்பாளையத்தை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் ரூபானந்தன் (வயது 28) ஓட்டிக்கொண்டு சென்றார். செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே ரோட்டில் பஸ்சுக்கு முன்னால் கரூர் மாவட்டம் உடையாரட்டியை சேர்ந்த அரசன் என்பவரது மகன் முனியப்பன் (வயது 41) மேட்டுப்பாளையத்தில் இருந்து லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர், தனக்கு முன்னால் சென்ற ஒரு லாரியை முந்தி செல்ல முயற்சித்து எந்தவித சிக்னலும் இல்லாத இடத்தில் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதாக தெரிகிறது . ரூபானந்தன் லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது பஸ்சிற்கு பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பனியன் நிறுவன பஸ் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பனியன் நிறுவன பஸ் அருகே வந்த கார் மீது உரசி இடதுபுறம் உள்ள சாலையில் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ரூபானந்தனுக்கு முதுகு, மார்பு மற்றும் இரண்டு கால்களில் பலத்த காயங்களும், பஸ்சில் பயணித்த 21 பேருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. அரசு பஸ்சில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக எந்தவித காயமும் இன்றி தப்பினர் . இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செக்கானூரணியில் அரசு பஸ் மோதியதில் பூ வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
    • செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகில் ஏ.கொக்குளம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(வயது40) பூ வியாபாரி.

    இவர் இன்று காலை செக்கானூரணியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் சவுந்தர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சவுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வெள்ளக்கோவில் வழியாக தாராபுரத்துக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியிலிருந்து திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் வழியாக தாராபுரத்துக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் ஈரோட்டிலிருந்து வெள்ளக்கோவில் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது முத்தூா் - வெள்ளக்கோவில் சாலை அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற தனியாா் பேருந்து மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் 2 பேருந்துகளும் சேதமடைந்தன. 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது.
    • லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஏ.புதூரை சேர்ந்த சிவசங்கர் ஓட்டினார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். இந்த பஸ் பண்ருட்டி அருகே கண்டரக்ேகாட்டை தென்பெண்ணை ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது. இதனால் பயணிகள் கூச்சல்போட்டனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசு பஸ் மோதி பெண் பலியானார்.
    • திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா(50). இவர்களுடைய பேரன் கார்த்திக்(வயது9). பாண்டி சைக்கிளில் மனைவியையும், பேரனையும் அமர வைத்து ஆலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த சந்திரா படுகாயம் அடைந்தார். பாண்டிக்கும், பேரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 108 ஆம்புலன்சு மூலம் காயமடைந்தவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த சந்திரா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • சரோஜாவிற்கு வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது
    • சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே தென்பேர் புதுப்பாளையம் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 68) இவரது மனைவி சரோஜா (60) மகன் முருகவேல் (40) இவர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தர்மலிங்கம் மனைவி சரோஜாவுடன் விழுப்புரம் ஸ்ரீராம் நகரில் உள்ள மகன் முருகவேல் வீட்டில் வசித்து வந்தனர். 

    இதனை அடுத்து சரோஜாவிற்கு வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சரோஜாவை சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் தர்மலிங்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சரோஜாவை பார்க்க தனது மகன் வீட்டிலிருந்து பஸ்சில் முண்டியம்பாக்கம் சென்றார். அப்போது தர்மலிங்கம் முண்டியம்பாக்கம் வந்துவிட்டதாக நினைத்து சிந்தாமணி என்ற பகுதியில் பஸ்சிலிருந்து இறங்கினார். அதன் பின்னர் முண்டியம்பாக்கம் என நினைத்து சிந்தாமணியில் இறங்கியதை அறிந்த தர்மலிங்கம் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிந்தாமணியில் இருந்து நடந்து சென்றார். சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்தார். 

    அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தர்மலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலம் அருகே விபத்து லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலியானார்.
    • முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    சென்னை கோயம்பே ட்டில் இருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றி க்கொண்டு விருதாச்சலம் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ஸ்ரீமுஷ்ணம் கோ அருகே உள்ள சாவடி குப்பம் பகுதியை சேர்ந்த இளையராஜா(42), என்பவர் ஓட்டி சென்றார்.கண்டக்டராக கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(45) உடன் வந்தார். அப்போது திண்டிவனம் அருகே மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேனிப்பட்டு என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் அதி வேகமாக மோதியது. இந்த விபத்தில் இடது புறமாக அமர்ந்து சென்ற நடத்துனர் வெங்கடேசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலாஹிர் அஹமது(35), உன்னலட்சுமி (42), திட்டக்குடியை சேர்ந்த அமல்ராஜ்(25), திருக்கோவிலூரை சேர்ந்த கோவிந்தராஜ்(41), வேப்பூர் பகுதியை சார்ந்த சுரேஷ்(37), உஷா (42) உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கண்டக்டரின் உடல் பிரேதபரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×