search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவுக்கு"

    • சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை
    • 100-க்கும் மேற்பட்ட லாரிகள், கனிம வளங்களை வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள், கனிம வளங்களை வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இரவு பகலாக சாலையில் லாரிகள் செல்வதால் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுவ தோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிக பாரம் ஏற்றி செல்லும் வாக னங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் கொண்ட குழு, படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது அந்த வழியாக வந்த 5 வாகனங்களை நிறுத்தினர்.

    அதிகாரிகளை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழு வாகனங்களை சோ தனை செய்தது. அப்போது அந்த வாகனங்களில் அனுமதி இல்லாமல் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளச்சல் அருகே லியோன் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • உடையார் விளை அரசு உணவு பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்று மாலை குளச்சல் அருகே லியோன் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வீடுகளுக்கு இடையே அதிக அளவில் ரேசன் அரிசி கடத்து வதற்கு பதுக்கி வைத்தி ருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 100 சிறு பிளாஸ்டிக் மூட்டை களில் சுமார் 2 டன் கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    உடனே அவற்றை பறிமுதல் செய்து உடையார் விளை அரசு உணவு பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ரேசன் அரிசியை அங்கு பதுக்கி வைத்திருந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சினிமாவில் வருவது போல் டெம்போவை அதிகாரிகள் துரத்தி பிடித்தனர்
    • தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையில் ஊழியர்கள் தக்கலை அருகே இரவிபுதூர்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத் திற்கிடமாக ஒரு டெம்போ வைக்கோல் ஏற்றிவந்தது. அதனை அதிகாரிகள் கை காட்டி நிறுத்தினர். ஆனால் டெம்போ நிற்காமல் வேகமாக சென்றது.

    உடனே அதிகாரிகள் அந்த டெம்போவை பின் தொடர்ந்து துரத்தி சென்ற னர். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மீது சென்றபோது டிரைவர் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். பின்னர் டெம்போவை சோதனை செய்த போது அதில் வைக்கோல் கட்டுகளுக்கு அடியில் நூதனமாக மறைத்து சுமார் 4 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கேர ளாவுக்கு கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேசன் அரிசியையும், டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்த ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சினிமாவில் வருவது போல் அதிகாரிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று கடத்தல் வாகனத்தை பிடித்தது அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது.
    • இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமே சென்றுவர அனுமதி உள்ளது.

    உள்ளூர் கிராம மக்கள் தவிர வேறு வாகனங்கள் செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மகாராஜன்புரம் மற்றும் தலமலை ,திம்பம் பகுதியில் வனத்துறையினர் 3 சோதனைசாவடி அமைத்துள்ளனர். வாகனங்கள் சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படும்.

    இந்தநிலையில் நேற்று மாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது. இந்த சோதனைச் சாவடி அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் இது பற்றி ஆசனூர் வனகோட்ட புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தடை செய்யப்பட்ட வனச்சாலையில் மாடுகளை ஏற்றி சென்ற சரக்கு வேனை பறிமுதல் செய்ய வனத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் தலமலை வனச்சரகர் சதீஷ் (பொறுப்பு) சம்பவ இடத்துக்கு சென்று தடை செய்யப்பட்ட வனச்சாலையில் சென்ற சரக்கு வேனை மாடுகளுடன் பறிமுதல் செய்து தாளவாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×