என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் சிறைபிடிப்பு"

    • பேருந்து சரி வர வராததால் இரவு 7 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் வீட்டிற்கு வருகிறார்கள்.
    • பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பி அரசு பஸ்சை சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஏப்பாக்கம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திண்டிவனம் சென்று கல்வி பயின்று வருகின்றனர்

    இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து ஏப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் தடம் எண் 23 மற்றும் 21 ஆகிய பஸ்கள் தொடர்ந்து வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது 6பி தொடர்ந்து சென்று வரும் நிலையில் அந்த பஸ்சும் ஒரு சில நாட்களில் ஏப்பாக்கம் கிராமத்திற்கு வரவில்லை எனவும் மாலை நேரங்களில் பேருந்து சரி வர வராததால் இரவு 7 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் வீட்டிற்கு வருவதாகவும் கூறி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பி அரசு பஸ்சை சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் போராட்டம் கைவிட ப்பட்டது.இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.
    • பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூரில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் அதிகம் பயணம் செய்து வருகிறார்கள்.

    பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காலை 7 மணி வரை இயக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு, சென்னை தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிகள் தவித்தனர். காலை 7.20 மணியளவில் முதல் பஸ் பணிமனையில் இருந்து உத்திரமேரூர் பஸ் நிலையத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    • கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான அரசு பஸ்கள் வந்து செல்லாமல் நேரடியாக செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    எல்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ்., பாயிண்ட் டூ பாயிண்ட் என போர்டுகளை மாட்டிக்கொண்டு புதுக்குடியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு நேரடியாக செல்வதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக வந்த 5 அரசு பஸ்கள் உட்பட 6 பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அனைத்து பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் வந்து செல்ல வேண்டுமென உத்தரவிட்டார்.

    ஆனால் அவரது உத்தரவை மீறி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் அரசு பஸ்கள் நேரடியாக செல்வதை கண்டித்து மார்ச் 6-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கரிடம் மனு அளித்தனர்.

    இந்நிலையில், புதுக்குடி புதிய பாலம் அருகில் போக்குவரத்துக் கழகத்தினரோடு இணைந்து போலீசாரும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பஸ்கள் உள்ளே சென்று வர அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக செல்ல முயன்ற அரசு பஸ்சை போக்குவரத்து கழக பணியாளர் வழிமறித்து உள்ளே சென்றுவர அறிவுறுத்தினார். அவரிடம் வாக்குவாதத்தில் கண்டக்டர் ஈடுபட்டதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்ததை தொடர்ந்து அந்த பஸ் உள்ளே சென்று வந்தது.

    இதற்கிடையில், இன்று அதிகாலை நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் பஸ் பயணிகளை புதுக்குடியில் இறக்கிவிட்டு நேரடியாக சென்றது தெரியவந்ததும், அந்தப் பஸ் திருச்செந்தூரில் இருந்து மீண்டும் திரும்பி ஸ்ரீவைகுண்டம் வந்தபோது பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

    கடந்த 2 நாட்களாக ஊருக்குள் வராத பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் பொதுமக்களை தொடர்பு கொண்டு, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற அந்த தனியார் பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்படும். பயணிகள் இருப்பதால் அந்த பஸ் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் தொடங்கும் நேரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து பழகிய பயணிகள், கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • இன்று காலை மாணவர்கள் ஒன்று திரண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை அருகே உள்ள சேந்தநாட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்சில் வானாம்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உளுந்தூர்பேட்டை அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவேகூடுதல் பஸ்கள் விடவேண்டுமம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை இன்று காலை மாணவர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் கூ. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்சினை சிறை பிடித்து சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்க ப்பட்டது தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ெஜகதீசன் தலைமையி லான போலீசார் விரைந்து செ ன்றனர்.பின்னர் மாணவ-மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியல் செய்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    ×