search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பொருள்"

    • பொது விநியோக பொருள்களான கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும்
    • புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    போரூர்:

    சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு :- பொது விநியோக பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும் இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது விநியோக பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூடுதல் கட்டணம் சேவை வரி மற்றும் வினியோக வரி என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது.
    • அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    இன்றைய அவசரமான உலகில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். இதனால் வேலை முடிந்து வரும் அவர்கள் வீடுகளில் சமைப்பதற்கு பதில் அதனை ஓட்டல்களில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்டனர்.

    இப்போது ஓட்டல்களுக்கு செல்வதற்கு பதில் அதனை வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து வாங்கும் வசதி வந்துவிட்டது. இதற்காகவே தொடங்கப்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் உணவு ஆர்டர் செய்வதற்காக தனி செயலிகளை தொடங்கி அதன்மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று உணவு பொருள்களை சப்ளை செய்து வருகிறார்கள்.

    இந்த செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரு நகரங்களில் இதுபோன்ற உணவு பொருள் வினியோகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு வீடுகளுக்கே சென்று உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் உணவு பொருளின் விலையுடன் சேவைக்கட்டணம் மற்றும் வினியோக கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்து வாங்கி கொள்ளும். அதாவது சென்னையில் ஒரு சிக்கன் பிரியாணியின் விலை ரூ.150 என்றால், அதனை உணவு வினியோக நிறுவனம் மூலம் வாங்கினால் அதற்கு வாடிக்கையாளர் ரூ. 200 செலுத்த வேண்டும்.

    இந்த கூடுதல் கட்டணம் சேவை வரி மற்றும் வினியோக வரி என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கூடுதல் கட்டணத்தை உணவு வினியோக நிறுவனத்தினர் தனித்தனியாக பிரித்து காட்டுவதில்லை. மொத்தமாக பில்லில் குறிப்பிட்டு இருப்பார்கள். இதனால் வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வளவு பணம் கூடுதலாக வாங்கப்படுகிறது என்பது வாடிக்கையாளருக்கு தெரியாது.

    இந்நிலையில் உணவு வினியோக நிறுவனங்கள் இப்போது டெலிவரி கட்டணத்தை ரூ.2 உயர்த்த உள்ளனர். இதுபோல உணவு வினியோக நிறுவனத்தின் உறுப்பினர் கட்டணத்தையும் அதிகரிக்க உள்ளனர். இக்கட்டணங்கள் அதிகரிக்கும் போது இப்போது வாங்கும் விலையை விட உணவு பொருள்களின் விலை 25 சதவீதம் வரை அதிகரிக்கும்.

    அதாவது உணவு வினியோக நிறுவனங்கள் மூலம் வாங்கும் பொருள்களுக்கு தான் இந்த விலை உயர்வு. இதனையே நாம் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டால் இந்த விலை உயர்வு இருக்காது.

    இதுபோல உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகவும் சேர்த்துள்ளனர். இதற்காக மாதத்திற்கு ஒரு கட்டணமும் வசூலிக்கிறார்கள். உறுப்பினர்களாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு உணவு வாங்கினால் சலுகை வழங்குவதாக கூறியிருப்பார்கள்.

    அந்த சலுகையை பெற வாடிக்கையாளர் தனது தேவைக்கு அதிகமான உணவை ஆர்டர் செய்ய வே ண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

    இவ்வாறு உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் கட்டண உயர்வு மூலம் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், இதனை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் தெரிவிப்பதில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களுக்கான விலையை முறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    • உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு நிதி உதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020-2021 ம் ஆண்டு முதல் 2024-2025ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவ னங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

    மேலும் தனி நபர், உணவு பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபடும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள நபர்கள் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயனடைய வழிவகை உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், https://pmfme.mofpi.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

    மேலும் விபரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியை அணுகவும். தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உணவு பொருள் குறித்து புகார் அளிக்க க்யூ.ஆர்.,கோடு வசதியுடன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • போட்டோவுடன் அனுப்ப 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பொருள் தரமின்மை குறித்து விரைவில் புகார் அளிக்க வசதியாக, க்யூ.ஆர்.,கோடு வசதியுடன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    உணவு பொருள் கலப்படம், தரமில்லாத உணவு விற்பனை, காலாவதியான பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்புத்துறையில் புகார் செய்யலாம். போட்டோவுடன் அனுப்ப 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓட்டல், பேக்கரி போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் விரைவாக புகார் அனுப்ப வசதியாக க்யூ. ஆர்., கோடு வசதியுடன் கூடிய, ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி உணவு பொருள் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம் என திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×