search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமராக்கள்"

    • கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்க வேண்டும்.
    • போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் திருட்டு குற்றங்களை கண்டுபிடிக்கும் வகையில் தரமான கேமரா அமைப்பது குறித்து ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபார கடைகள், நிதி நிறுவனங்கள் அதே போல் அனைத்து வீடுகளிலும் திருட்டை தடுக்கும் வகையில் தரமான கேமரா வைக்க வேண்டும் . பல்வேறு வியாபார கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்க வேண்டும். பெரும்பாலான கடைகளில் கல்லாப்பெட்டியை குறிவைத்தே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் பெரும்பாலான கடைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் செயல்பட்டும் பதிவு ஆகாத நிலையில் உள்ளது. சாலையில் செல்வோரை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும் வகையில் எவரேனும் நின்று கொண்டிருந்தாலோ, தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தாலோ, எவரேனும் நின்று கொண்டு நோட்டமிட்டாலோ உடனடியாக 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும் .

    மேலும் பொதுமக்கள் குற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 என்ற போன் நம்பரை பயன்படுத்தவும். மேலும் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்டம், சேவல் சண்டை,லாட்டரி சீட்டு,கஞ்சா , பான் மசாலா, குட்கா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்பனையை தடுக்கும் வகையில் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் தெரிவித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .

    • கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
    • ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் போலீசார் இடையேயான கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கஞ்சா, சாராயம் போன்ற போதைப்பொருட்கள் விற்பவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் நடக்காத வகையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கிராமப்பகுதிகளில் தங்களது குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால் நீர்நிலைகள் அல்லது தண்ணீர் தேங்கிய பகுதிகளில் குளிக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தனியாக அனுப்பக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
    • திருட்டு, வழிப்பறி, பிக்பாக் கெட்போன்றசமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன

    கன்னியாகுமரி :

    இந்தியாவின்தென் கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக் கணக்கானஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இது தவிர நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய3மாத ங்களும்சபரி மலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களின் வரு கையும் அதிக அளவில் காணப்படும்.மேலும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறைசீசனை யொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகஅளவில் இருக்கும்.

    சுற்றுலாத்த லமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, பிக்பாக் கெட்போன்றசமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் கன்னியாகுமரி நகர பகுதியில்106-க்கும் மேற்பட்டலாட்ஜுகளும் 1000-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளும் ஏராள மானவீடுகளும் அமைந்து உள்ளன.இவற்றில்திருட்டு போன்றசம்பவங்களும் அடிக்கடிநிகழ்ந்து வருகின் றன.இதற்கிடையில் போக்குவரத்துநெரிசல் மிகுந்த நேரங்களில்வாகன விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன.கடத்தல் போன்ற சம்பவங்களும் நடந்துவருகின்றன. இதற்கிடையில் தினமும் கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், மத்திய- மாநில அமைச்சர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் போன்ற முக்கிய விருந்தி னர்கள் வந்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் கன்னியாகுமரி நகர பகுதி முழுவதையும் போலீசார் பாதுகாப்பு நலன் கருதி தங்களது கட்டுப்பாட் டுக்குள்கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நகர பகுதியில்உள்ள படகுத்துறை, முக்கடலும் சங்கமிக்கும்திரிவேணி சங்கமம்சங்கிலித்துறை கடற்கரைபகுதி, காந்தி மண்டப பஜார், பார்க்வியூ பஜார், கடற்கரை சாலை, மெயின்ரோடு விவே கானந்த புரம் சந்திப்பு, சர்ச் ரோடு சந்திப்பு, புதிய பஸ்நிலைய த்துக்கு செல்லும்கோவளம் ரோடு, விவேகானந்தாராக் ரோடு, சன்னதிதெரு, ரதவீதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அதி நவீன கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது

    • பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது.
    • போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷன்' திறனுடன் இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சித்ரவதைகளை தடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது.

    இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் விவகாரத்தில் மாநில, மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவையான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும்.

    போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷன்' திறனுடன் இருக்க வேண்டும். அவற்றின் பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் கைதிகள் தாக்கப்படுவது, சித்ரவதை, மரணம் போன்ற புகார்கள் தெரிவிக்கப்படும்பட்சத்தில் மாநில மனித உரிமை ஆணையமும், கோர்ட்டுகளும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டுப்பெற வேண்டும். சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார நுண்ணறிவு பிரிவு, தீவிர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

    இந்த உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 25 மாநில யூனியன் பிரதேச அரசுகள் இன்னும் பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் சித்தார்த்தா தவே தெரிவித்தார்.

    அதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில உள்துறைச் செயலாளர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ. 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது
    • சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே காரை கிராமத்தில் அரசுமேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தபள்ளியில் காரை தெரணி வரகுபாடி புதுக்குறிச்சி நாரணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 485 மாணவர்க ள்பயின்றுவருகின்றனர்.நல்ல சுற்றுச்சூழலுடன் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளியில் பள்ளி முடிந்த பிறகும் விடுமுறைநாட்களில் சமூகவிரோதிகள் நுழைந்து மதுஅருந்துவதும் மது அருந்திய பாட்டில்க ளை அங்கேயே விட்டு செல்வதுமாக இருந்துள்ளனர். மறுநாள் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் போது வளாகத்திற்குள் மதுபாட்டில்கள் கிடப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

    இதனை தடுக்க வேண்டும் என நினைத்த பள்ளிதலைமை ஆசிரியர் அக்பர்கான் தலைமையிலான ஆசிரியர்கள், காரை பகுதிகளில் சமூகப்பணி செய்துவரும் கலைவேந்தன் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் கலைவேந்தன் சொந்தசெலவில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 சிசிடிவி கேமராக்களை பள்ளி வாளகத்தில் அமைத்து க்கொடுத்துள்ளார்.

    அதன் பிறகு சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் வருவது அடியோடு தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காரை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் நிம்மதியும் மகிழ்சியும் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் கலைவேந்தனிடம் கேட்ட போது பிற அரசுபள்ளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தன்னால் முடிந்ததை செய்து தர தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே வரகுபாடி கிராமத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் வறியவர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து கால்நடை(மாடு)வாங்கி இலவசமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    • குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய குழு தலைவர்
    • குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில், ஒன்றிய குழு சாதாரண கூட்டம், ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டம் துவங்கும் முன் ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு க்கு மன்றத்தின் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில், குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சி பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும், ஒவ்வொரு ஊராட்சிக்குட்பட்ட இரு தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலைப் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாக ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகர் கூறினார்.தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய வரவு செலவுகள் மற்றும் திட்ட பணிகள் குறித்து 19 தீர்மானங்களை மேலாளர் சுரேஷ் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது, கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ×