search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவில் சந்தேகம்"

    • உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
    • போலீசார் விசாரணை

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்ட மடுவைச் சேர்ந்தவர் குமார் மகன் சுள்ளான், (20) இவர், அரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈட்டியம் பட்டியை சேர்ந்த சபீனா என்பவரை பார்ப்பதற்காக சுள்ளான் இருசக்கர வாகனத்தில் ஈட்டியம் பட்டிக்கு சென்று உள்ளார்.

    இந்நிலையில், அரூர்–தீர்த்தமலை சாலையில், வேப்பம்பட்டி ரைஸ்மில் பஸ் நிறுத்தம் அரு கில்  சுள்ளான் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து அரூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சுள்ளான் அடித்து கொலை செய்யப்ப ட்டதாவும், அவரது கொலைக்கு காரணமா னவர்களை கைது செய்யக்கோரி, நேற்று அரூர் கச்சேரிமேட்டில், சுள்ளானின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்க ளுடன், அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். இதையடுத்து. மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.  இதைத்தொடர்ந்து உயிரிழந்த சுள்ளானின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோத னைக்கு பிறகு சுள்ளானின் உடலை பெற்றோரிடம் ஒப்ப டைத்தனர்.

    உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    • பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    தருமபுரி மாவட்டம், வேனுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவரது மனைவி ஜோதிமணி (30). தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சீனிவாசன் பஞ்சாபில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பினார். விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு செல்ல சீனிவாசன் முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

    திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜோதிமணி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்
    • போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் திலீப் (வயது 19). இவர் திருவலங்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி, முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் திலீப் வழக்கம் போல் நேற்று கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனைக் கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருவலங் காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திலீப் உடலை மீட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் திலீப்பின் உறவினர்கள் குவிந்தனர்.

    சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீரென அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த அரக்கோணம் போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதானல் சமாதானம் அடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கலைந்து சென்றனர்.

    • கடலூர் அருகே மர வேலை தொழிலாளி அடித்துக்கொலை? போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
    • கார்த்திகேயன் அணிந்திருந்த கைலி மற்றும் உடலில் லேசான காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வாண்டராசன் குப்பம் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). மரவேலை செய்து வந்தார். இவர் இன்று காலை நடுவீரப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உடலில் லேசான காயத்துடன் இறந்த நிலையில் கிடந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து நடுவீரப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த நிலையில் இருந்த கார்த்திகேயன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் எப்படி இறந்தார்? இவருடன் யாராவது இருந்தார்களா? என்பதை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உறவினர்கள், கார்த்திகேயன் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. மேலும் கார்த்திகேயன் அணிந்திருந்த கைலி மற்றும் உடலில் லேசான காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×