என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதுகுளத்தூர்"
- முதுகுளத்தூரில் ஜமாபந்தி நடந்தது.
- சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடந்தது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடந்தது.
முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டம் மற்றும் தெற்கு உள்வட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டது. வருவாய் தீர்வாய தணிக்கையின் போது வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர்கள் மீனாட்சி சுந்தரம், சங்கர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டத் தலைவர் சுரேஷ், வட்ட செயலாளர் பூ முருகன், வட்ட பொருளாளர் அய்யப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறையினர் கலந்து கொண்டனர்.
- மழைநீர் செல்ல புதிய குழாய் பதித்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- முதுகுளத்தூர் பேருராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருராட்சி மன்ற கூட்டம் சேர்மன் ஷாஜஹான் தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலை வகித்தார். ஊழியர் ராஜேஸ் வரவேற்றார்.
கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
மோகன்தாஸ் (7-வது வார்டு திமுக கவுன்சிலர்)
சொத்துவரி, குடிநீர் வரி எவ்வாறு வசூலிக்கப்படுகிறது.இதர வருவாய் இனங்கள் குறித்த இணைப்பு வைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தெரியவரும்.
சேர்மன்:- தண்ணீர் வரி மாதந்தோறும் வசூலிக்கப்படுகிறது.
மோகன்தாஸ் (7வது வர்ர்டு):- பிளான்அப்ரூவல் எவ்வாறு வசூலிக்கப்ப டுகிறது?
சேகர் (10-வது வார்டு):- பஸ் நிலைய கடைகள் எப்போது ஏலம் விடப்படும். சேர்மன்:- அதிகாரிகளின் காலத்தில் போர்டு 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இப்போது 18 மாதங்கள்தான் முடிந்த நிலையில் மீதி 18 மாதங்கள் முடிந்தபின்பு முடிவு செய்யப்படும்.
மோகன்தாஸ் (7வது வார்டு):- சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களை மிரட்டுகிறது. உடைந்த குழாயை அகற்றி உடனடியாக புதிய குழாய் பதித்து அங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
சேகர் (10 வது வார்டு கவுன்சிலர்):- பிரேத பரிசோதனை கூடம் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? (சேர்மன்):- பேரூராட்சி 6-வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது.
உம்முதர்தா (12-வது வார்டு):- எங்கள் பகுதியில் வாறுகால் அமைக்க வேண்டும். மோகன்தாஸ் (7-வது வார்டு):- கீழரதவீதியில் வாறுகால் அமைத்து கொடுக்க வேண்டும். காவிரி குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமலட்சுமி:- மழைநீர் தேங்கியுள்ளதை அகற்ற வேண்டும்.
பார்வதி:- கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்