என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெட்டி"
- மர்ம நபர்கள் அட்டகாசம்
- திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இரணியல்:
இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் சேவியர் ராஜ் (வயது 69). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆலன்விளை பகுதியில் உள்ள தனது ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வாழை தோட்டத்தை பார்வையிட சென்றார். அங்கு அவரது தோட்டத்திலும், பக்கத்து தோட்டத்திலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஜாண் சேவியர் ராஜ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
- பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர்.
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து உள்ளன. பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
- கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.
- இந்த நிலையில் வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர்.
காகாபாளையம்:
சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நக ராட்சிக்கு உட்பட்ட கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.
இந்த குட்டையில் மழை காலங்க ளில் தண்ணீர் தேங்கும். இந்த குட்டையின் கரை யோரத்தில் பனை மரங்கள் உள்ளது. இந்த குட்டையை யும், அருகாமையில் உள்ள சுடுகாட்டையும் பிரிக்கும் வகையில் நடு பகுதியில் ரோடு செல்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்டையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டி ருந்தன. தற்போது அவற்றை அகற்றி விட்டு, அங்கு தற்போது பொது மக்கள் நடந்து செல்ல நடைமேடை, நீர்த்தேக்க குட்டை மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக குட்டையில் இருந்து லாரிகளில் 250 லோடு மண் வெட்டி எடுக்கப்பட்டது. மேலும் இங்கு கடந்த வாரம் சுமார் 30 ஆண்டுகள் பழ மையான இச்சி மர கிளை களை வெட்டி அகற்றி னார்கள். அதனை தொடர்ந்து, அரசு அனுமதி யின்றி கரையோரமாக நின்ற 15 ஆண்டுகள் பழமையான பனைமரத்தை வேரோடு வெட்டி சாய்த்துள்ளனர்.
மேலும் குட்டையின் கரையோரம் கட்டப்பட்டி ருந்த தானியகளத்தை இடித்து அகற்றினர். இத னால் சுற்று வட்டார மக்கள் தங்கள் தோட்டங்க ளில் விளையும் ராகி, சோளம், கம்பு, கடலை ஆகிய தானி யங்களை காய வைக்க இடம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள சுடுகாட்டை அகற்றும் முயற்சியில் நக ராட்சியினர் ஈடுபட்டு வரு வதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு செலவில் மரக்கன்றுகள் நடவு செய்துவிட்டு, அதன் பிறகு அந்த மரக்கன்று களை, பிடிங்கி அகற்றுவது தொடர் கதையாக உள்ளது. பனை மரங்களை பாது காக்கும் வகையில் அவற்றை வெட்ட கூடாது என தமிழக அரசு ஏற்க னவே உத்தரவிட்டு இருக்கி றது. மேலும் பல்வேறு இடங்களில் பனை மர விதைகளை அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நட்டு ஊக்கவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வரு வாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர். இது பற்றி அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை என குமுறலுடன் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
- ஏற்காடு அடிவாரம் வழியாக தினமும் லோடு, லோடாக லாரிகளில் பெரிய பெரிய மரங்கள் சேலத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மரங்கள் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
- 2 லாரிகளையும் பிடித்து ஏற்காடு தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
சேலம்:
ஏற்காடு அடிவாரம் வழியாக தினமும் லோடு, லோடாக லாரிகளில் பெரிய பெரிய மரங்கள் சேலத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மரங்கள் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்காடு செம்மநத்தம் கிராமத்தில் கலெக்டர் கார்மேகம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 லாரிகளில் மரங்கள் வெட்டி கொண்டு செல்லப்பட்டது. இதனை கலெக்டர் கார்மேகம் பார்த்து அந்த லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது ஏற்காடு புத்தூர் கிராமத்தில் இருந்து மரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து 2 லாரிகளையும் பிடித்து ஏற்காடு தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். பின்னர் ஏற்காடு தாசில்தார் 2 லாரிகளையும் ஏற்காடு வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்து, மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரங்கள் கடத்தலை தடுக்க ஏற்காடு அடிவாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையிலான குழு அமைத்து, தினமும் லாரிகளை ேசாதனை செய்தால் இதுபோல் நிறைய லாரிகள் பிடிபட வாய்ப்புகள் உள்ளன.
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது.
- இதனை தொடர்ந்து ஏரி மறுசீரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
சேலம்:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக தீர்த்து வைத்த பெருமை இந்த ஏரிக்கு உண்டு. 1924-ம் ஆண்டு சேலம் மாநகருக்கென மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.
அதே நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலமாக இருந்த பனமரத்துப்பட்டி ஏரியில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்தது. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ெஜயசங்கர், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பல திரைப்படங்கள் இங்கே படமானது குறிப்பிடத்தக்கது. இப்படி சிறப்பு வாய்ந்த பனமரத்துப்பட்டி ஏரி 2137.92 ஏக்கர் பரப்பளவும், 168 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது.
சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு சுற்றியுள்ள ஜருகுமலை, போதமலை, வரட்டாறு, கூட்டாறு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து நிரம்பும். அரசு சார்பில் ஏரி பராமரிக்கப்படாததாலும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் ஏரிக்கு நீர்வரத்து இன்றி கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. அத்துடன் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏரிக்கு தண்ணீர் வரத்துக்கு வழியில்லாமல் ஆனது.
இந்த நிலையில் பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைப்பது தொடர்பாக அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ஏரி மறுசீரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதற்கட்டமாக ஏரியில் பரந்து விரிந்து காணப்படும் சீமை கருவேல மரங்கள் மற்றும் பல்வேறு வகை விலை உயர்ந்த மரங்களை அகற்றும் வகையில் டெண்டர் விடப்பட்டது. இந்த மரங்களை வெட்டி எடுத்துக்கொள்ள சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சுமார் ரூ.1.84 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனம், ஏரியில் உள்ள மரங்களை வெட்டி எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து மரங்களை வெட்டி, அவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக மரங்கள் வெட்டும் கருவி, அரிவாள், கத்தி, கோடாரி, வாள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. பெரிய மரங்கள் கயிறு கட்டி வெட்டி சாய்க்கப்படுகின்றன.பின்னர் அங்கு வைத்தே நீளமாக அளவீடு செய்து, மரங்கள் துண்டு துண்டாக வெட்டி, லாரிகளில் ஏற்றப்படுகின்றன.
குறிப்பாக விறகுகள் மற்றும் வீட்டு உபயோகத்துக்கு பயன்படும் மர கட்டைகள், பலகைகள் என தனித்தனியாக தரம் பிரித்து லாரிகளில் ஏற்றப்படுகிறது. தினமும் ஏராளமான லோடுகள் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் மரங்கள் நிறைந்து பசுமையாக காணப்பட்ட ஏரி, கொஞ்சம், கொஞ்சமாக வெட்ட வெளியாக மாறி வருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்