search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன்கார்டு"

    • தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) வட்ட அளவில் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

    செங்கல்பட்டு-கடம்பூர், செய்யூர் -மடயம்பாக்கம், மதுராந்தகம் -செம்பூண்டி, திருக்கழுக்குன்றம் - நெம்மேலி, திருப்போரூர்-அகரம் வண்டலூர்-போலச்சேரி மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில், ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம். முகவரி மாற்றம். புதிய ரேஷன்கார்டு நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு நடத்தினார்.
    • பிச்சை எடுத்து கொண்டிருந்த விதவை தாயான லட்சுமிக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டையினை நேரில் வழங்கி மறுவாழ்வு ஏற்படுத்தியுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு நடத்தினார்.

    அப்போது அந்த கோவிலில் அருகில் மனநலம் குன்றிய மகனோடு லட்சுமி என்ற பெண் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

    இது பற்றி அவரிடம் விசாரித்தபோது மொண்டுகுழி கிராமத்தை சேர்ந்த அவருடைய கணவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது தெரிய வந்தது. 12 வயது மகள் தீர்த்தமலை அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.

    இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த விதவையான லட்சுமி மற்றும் அவருடைய குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். அதன்படி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், சிட்லிங் ஊராட்சி, வேலனூர் கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர் மக்கள் தொடர்பு திட்டமுகாமில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, தீர்த்தமலை கிராமத்தில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் அருகில் மனநலம் குன்றிய மகனோடு வறுமையின் பிடியில், வாழ்வாதாரம் இன்றி பிச்சை எடுத்து கொண்டிருந்த விதவை தாயான லட்சுமிக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டையினை நேரில் வழங்கி மறுவாழ்வு ஏற்படுத்தியுள்ளார்.

    இதுமட்டுமல்லாமல், அரூர் வட்டம், வேடகட்ட மடுவு ஊராட்சி, டி.ஆண்டியூர், மொண்டுகுழி கிராமத்தில் லட்சுமி வசித்து வரும் பகுதியிலேயே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 20 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 5 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் மக்கள் தொடர்பு திட்டமுகாமில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி 14 வார்டுக்கு உட்பட்ட காடம்பாடி சவேரியார் கோவில் தெரு பகுதியில் சுமார் 1000 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள 5-ம் எண் அரசு நியாய விலைக்கடையில் வழங்கபடும் அரிசி தரமற்று உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் வழங்கபடுவதாக கூறப்படுகிறது.

    மேலும் பழுத்த சிவப்பு நிற கலர்களில் வண்டுகள் மொய்த்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் சமைத்து உண்ணும் போதும் துர்நாற்றம் வீசுவதாகவும் தங்கள் குழந்தைகள் உணவை சாப்பிட முடியவில்லை என்றும் இந்தஅரிசியை வாங்க வேண்டும் என ஊழியர்கள் பொதுமக்களை நிர்பந்தி பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

    எனவே தங்கள் பகுதிக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×