search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிரிதி மந்தனா"

    • இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு, மாற்றுத்திறனாளி சிறுமியை இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு ஒரு மொபைல்போனை அவர் பரிசாக வழங்கினார்.

    இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து ஆடிய இந்தியா அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது. இன்று இரவு நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்த நிலையில் ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஷபாலி வர்மா 40 ரன்னில் வெளியேறினார். ஹேமலதா 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் சதம் விளாசினர்.
    • இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதற்கு முன்னதாக பெண்கள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் அடித்தது கிடையாது. தற்போது 292 ரன்கள் விளாசி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி சாதனைப் படைத்துள்ளது. இதன்மூலம் 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது.

    ஷபாலி வர்மா 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். 65 ஓவர் முடிந்த நிலையில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் குவித்துள்ளது. ஷபாலி வர்மா 175 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார்.
    • மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசினார். இது அவரின் 6-வது ஒருநாள் சதம் ஆகும்.

    இந்த நிலையில் இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்துள்ளார்.

    மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார். 27 வயதான ஸ்மிரிதி மந்தனா 84 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஏழு சதங்கள் அடித்துள்ளார். இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனா 27 அரைசதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 20 ஓவர் போட்டிகளில் ஒரே ஆண்டில் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
    • இந்த ஆண்டில் இரு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களுடன், யாதவ் சிறந்த 20 ஓவர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

    துபாய்:

    ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2022 இல் முன்மாதிரியாக இருந்த வீரர்களான சிக்கந்தர் ராசா, சாம் குர்ரான் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் மட்டுமே.

    சூர்யகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டு ஆட்டத்தின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரே வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆவார். அவர் 187.43 என்ற அபத்தமான ஸ்டிரைக் ரேட்டில் 1164 ரன்களை எடுத்து, அதிக ரன் எடுத்தவராக இந்த ஆண்டை முடித்தார்.

    டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டில் இரு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களுடன், யாதவ் சிறந்த 20 ஓவர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

    கடந்த ஆண்டு ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற மந்தனா, குறுகிய வடிவிலான நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார்.

    இந்திய வீராங்கனைகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனையாக மந்தனா திகழ்கிறார். (வெறும் 23 பந்துகளில்) அடித்து டி20களில் 2500 ரன்களை கடந்ததுள்ளார்.

    • இந்திய அணி 11.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தானை தோற்கடித்தது.
    • இந்திய அணி வீராங்கனை மந்தனா 63 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

    இந்த போட்டியின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. மழையின் காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 11.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்மிரிதி மந்தனா அரை சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்குப் பிறகு 1000-க்கும் மேற்பட்ட ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய பேட்டர் என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார். மந்தனா 1059 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கோலி மற்றும் ரோகித் முறையே 1789 மற்றும் 1375 ரன்கள் குவித்துள்ளனர்.

    ×