என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொடர்ச்சியாக"
- காலையில் கடும் வெயிலும், மாலையில் கோடை மழையும் பெய்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மாலையில் கோடை மழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக கரிய கோவில், ஆனைமடுவு, வீராணம், ஆத்தூர் உள்பட பல பகுதி களில் கனமழை கொட்டி யது. இந்த மழையால் சாலை களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது.தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்ச மாக கரிய கோவிலில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், ஆனைமடு 14, வீராணம் 13, ஆத்தூர் 11.2, கெங்கவல்லி 9, தம்மம்பட்டி 7, ஏற்காடு 2.6 மில்லிமீட்டர் என மாவட்டம் முழுவதும் 84.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.
- கெங்கவல்லி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.
- மாவட்டத்தில் அதிக பட்சமாக கெங்கவல்லியில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக கெங்கவல்லி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது . மேலும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
99.60 மி.மீ. மழை
மாவட்டத்தில் அதிக பட்சமாக கெங்கவல்லியில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆனை மடுவு 15, ஏற்காடு 4, வீரகனூர் 2, சேலம் 0.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 30.01 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
- இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
கன மழை
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அம்மாப்பேட்டை, பெரமனூர், கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி, தாதகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது . இதனால் அந்த வீடுகளில் வசிப்போர் தூங்க முடியாமல் தவித்தனர். பின்னர் பாத்திரங்களில் எடுத்து தண்ணீரை வெளிறேற்றினர்.
சேலம் புறநகர்
இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
250.6 மி.மீ. மழை
மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 80.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 61.8, எடப்பாடி 26, சங்ககிரி 24, கரிய கோவில் 19, ஓமலூர் 15, தம்மம்பட்டி 10, பெத்தநாயக்கன்பாளையம் 6, ஏற்காடு 4.2, வீரகனூர் 4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 250.60 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்