என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யோகாசன போட்டி"
- திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்த 32 மாணவ-மாணவிகள் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட உள் விளையாட்டு அரங்கில், மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. போட்டியை தலைவர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பொது பிரிவு, சிறப்பு பிரிவு மற்றும் ஆர்ட்ஸ்டிக், ரிதமிக் ஆகிய பிரிவுகளில் வயது அடிப்படையில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்த 32 மாணவ-மாணவிகள் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் செயலாளர் நித்யா, ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர்.
- திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்,
திருப்பூர் :
திருப்பூர் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்.இப்போட்டியில் ரேங்கிங், ஸ்பெஷல் மற்றும் சாம்பியன்ஷிப் போன்ற பல்வேறு பிரிவுகளில் 50 க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர். மிகச்சிறந்த பங்கேற்பிற்கான விருதினையும் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் சார்பில் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்கு னர் சக்திநந்தன், துணை இயக்குனர் வைஷ்ணவி நந்தன் மற்றும் தலைமை ஆசிரியை சியாமளா ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
- பரமக்குடி அப்துல் கலாம் பள்ளி மாணவர்கள் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றனர்.
- சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.
பரமக்குடி
பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்னவ்(கடல்) யோகா மையம் மூலம் நடத்தப்பட்ட மண்டல அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் அனைத்து மாணவர்களும் திறமையை வெளிப்படுத்தி 9 பேர் முதல் பரிசும், 30-க்கும் மேற்பட்டோர் 2-ம் பரிசும், 10-க்கும் மேற்பட்டோர் 3-வது பரிசும் பெற்றனர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கமலக்கண்ணன், மணிகண்டன் ஆகியோரையும், பரிசு பெற்ற மாணவர்களையும் பள்ளி சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.
- 10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.
- தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.
திருப்பூர்:
திருப்பூர்சகோதயா பள்ளிகளுக்கான யோகாசன போட்டி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டஅளவிலான பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். 10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.
இதேபோல தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.இப்போட்டியில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில், பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியின் 49மாணவ, மாணவிகளில்33 மாணவர்கள் முதல் பரிசும், 14 மாணவர்கள் 2ம்பரிசும் பெற்று சாம்பியன்பட்டம் பெற்றனர்.
இதில் மாணவி அர்சிதா 138 புள்ளிகளும்,பிரதிஷா 131 புள்ளிகளும் பெற்று இலங்கையில்நடக்கும் யோகாசன போட்டிக்கு தகுதி பெற்றனர்.இதையடுத்து யோகாசன போட்டியில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர்சிவசாமி, செயலாளர்சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, முதல்வர் லாவண்யா ஆகியோர்பாராட்டினர்.
- தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு
- மாநில அளவில் சாதனை
அரக்கோணம்:
திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் யோகாசன போட்டி நடைபெற்றது.
இதில் அரக்கோணம் பாரதிதாசனார் கல்வி குழும மாணவர்கள் பவித்ரன், ஆகாஷ் ஆகியோர் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பாரதிதாசனார் கல்வி குழுமத்தின் இயக்குனர்சுந்தர், முதல்வர் பத்மா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் அனைவரும் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர்.
- தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பொதுபிரிவு, சிறப்புப்பிரிவு மற்றும் சேம்பியன்ஷிப் என மூன்று பிரிவுகளில் யோகாசன போட்டி நடைபெற்றது
திருப்பூர்
திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மற்றும் யோகா கலாசார சங்கம் ஆகியவை சார்பில், மாநில அளவிலான யோகாசன போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக பிரண்ட்லைன் பள்ளிகளின் தாளாளர் சிவசாமி, மண்டல யோகா டிரஸ்ட் தாளாளர் பாலகிருஷ்ணன், இண்டர்நேஷனல் யூத் யோகா சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியானது பொதுபிரிவு, சிறப்புப்பிரிவு மற்றும் சேம்பியன்ஷிப் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. சேம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி நேகா, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரோஹித் ஆகியோர் வெற்றி பெற்று, அந்தமானில் நடைபெறும் உலக அளவிலான யோகாசன போட்டிக்குத் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரண்ட்லைன் பள்ளிகளின் தாளாளர் சிவசாமி பரிசுகளையும், சுழல் கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். இதேபோல், பிரண்ட் 1 லைன் குழுமப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்தனர். அவர்களுக்கும் பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில், பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா, யோகா ஆசிரியர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்