search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ."

    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி, போட்டியை தொடங்கி வைத்தார்.
    • கனரா வங்கி 5 அடி சுழற்கோப்பையை கைப்பற்ற விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பெண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அணியினர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட 18-ம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டியில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த கைப்பந்து அணியினர் கலந்து கொண்டனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி, போட்டியை தொடங்கி வைத்தார். கனரா வங்கி 5 அடி சுழற்கோப்பையை கைப்பற்ற விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பெண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அணியினர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி பொது மேலாளர் சக்கலா சுரேந்திர பாபு, மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ், நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் திருமாறன், தொழிலதிபர் ராஜங்கம் சீனிவாசன், தேசிய பிச் வாலிபால் தலைவர் சோலைராஜ், ஆல்ரின், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், கந்தவேல், கிராம நிர்வாக அலுவலர்கள், மகேஷ், ஜான்சி பேபி, படர்ந்த புளி மேலாளர், லியா கைப்பந்து கழக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அயன்பொம்மையாபுரம் கிராமத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கி வைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கையினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வேலுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் அயன்பொம்மையாபுரம் கிராமத்திலும், விளாத்திகுளம் பேரூராட்சி 3- வது வார்டு பகுதியிலும் உறுப்பினர் சேர்க்கை பணியினை தொடங்கி வைத்தனர்.

    இதில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மகேந்திரன் ஊராட்சி தலைவர் சித்ரா முத்துராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, கலை இலக்கிய அணி சேதுராஜன், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, கிளை செயலாளர்கள் முருகன், கந்தவேல், ரத்தினசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், தொ.மு.ச. சுப்பையா, சிந்தலக்கரை சாமி, சுப்புராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி கனகவேல், ஒன்றிய அவைத்தலைவர் தர்மராஜ், பொருளாளர் கருப்பசாமி, துணை செயலாளர் பாலம்மாள் தங்கராஜ் உட்பட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடந்தது.
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், நகர தி.மு.க செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் தமிழரசி, ஜெயராணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்க நிதியுடன் விளாத்திகுளம் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி, கிராம மேம்பாட்டு திட்டம், மரங்கள் மக்கள் இயக்கம் மற்றும் ரம்யா தட்டச்சு பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்த கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், டாக்டர் அனிதா மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளம்புவனம் கிராமத்தில் நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • எட்டயபுரத்தில் ரத்ததான முகாமையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் பேரூர் செயலாளர் பாரதி கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஊராட்சி தலைவர் முத்து குமார், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, கோவில்பட்டி முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர பாண்டியன், நடுவிற்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், தொழிலதிபர் முனியசாமி, வார்டு செயலாளர்கள் பிச்சை, அருள் சுந்தர், மயில்ராஜ் மகளிர் அணி முருகலட்சுமி, முத்துமாரி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் எட்டயபுரத்தில் நியூ ஷாலோம் மிஷன் அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தான முகாமையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எட்டையபுரம் நடுவிற்பட்டி பகுதியில் இருந்த பஸ் நிறுத்தம், சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டது.
    • ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே எட்டையபுரம் நடுவிற்பட்டி பகுதியில் இருந்த பஸ் நிறுத்தம், சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டது. இதையடுத்து பஸ் நிறுத்தத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 -லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு எட்டையபுரம் பேரூராட்சி மன்ற நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், துணைத் தலைவர் கதிர்வேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமி பூஜையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். மேலும் கட்டுமான பணிகளை விரைவில் முடித்திட அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து எட்டையபுரம் நடுவிற்பட்டி15-வது வார்டில் ரூ. 11 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி எட்டையபுரம் நகரச் செயலாளர் பாரதி கணேசன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், தி.மு.க வார்டு செயலாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
    • பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே ஜக்கம்மாள்புரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

    இந்நிலையில், அங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில், ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அங்கு செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வந்து, பள்ளியில் 81 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பழைய நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

    அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும், வள்ளி நாயகிபுரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு எம்.எல்.ஏ. விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வீரபாண்டியபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் அனைத்து துறைகள் பங்கேற்கும் சிறப்பு முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, முதல்-அமைச்சரின் மானாவாரி வேளாண்மை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2500 மதிப்பிலான நியூட்ரிசாப் பயிர் பூஸ்டர் டானிக் மற்றும் கம்பு செயல் விளக்கத்திடல் திட்ட பயனாளிகளுக்கு ஹெக் டருக்கு ரூ.6000 மதிப்பிலான இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பேசினார்.

    வேளாண்மை உழவர் நலத்துறை நலத்துறை சார்பில் கருத்து கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. முகாமில் விவசாயிகளிடம் தேவை குறித்த மனு பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன், வேளாண் உதவி இயக்குநர் கீதா, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகப் பிரியா, லக்கம்மாள், ஜக்கம்மாள்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் சிவகுரு, செயலாளர் பார்த்திபன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பா ளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுக் கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • இலவச பயணத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று எம்.எல்.ஏ. பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நேற்று தொட ங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது வாழ்வா தரத்தை பெருக்கி கொள்ள முடியும். கிராம புற பகுதிகளிலும் குடியிருப்பு இல்லாதவர்களுக்கும் குடியிருப்பு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விளாத்திகுளம் தொகுதியில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கும் வகையில் ரூ.608 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளார். முதல்-அமைச்சர் கடந்த முறை பொங்கல் பரிசு குறித்து குற்றச்சாட்டு வைத்ததன் வெளிப்பாடின் காரணமாக அப்பொருட்கள் வழங்க பட முடியவில்லை. ஆனாலும் பொதுமக்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகையாக கொடுக்கப்படும் என முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார். அதோடு சேர்த்து பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    திராவிடம் மாடல் அரசு பதவி ஏற்ற உடன் மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.700 முதல் ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று பேசினார்.

    • பொதுக்கூட்டத்திற்கு புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார்.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், மேலக்கரந்தை மற்றும் வெம்பூர் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தலைமை பேச்சாளர் பவானி கண்ணன் பேராசிரியரின் கொள்கை குறித்தும், கழக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரவி, பாலையா, ஒன்னம்மாள், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலா ளர்கள், அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சாலை மேம்பாட்டு பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • பூமி பூஜை விழாவில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    புதூர் ஊராட்சி ஒன்றி யம், விளாத்திகுளம்- அருப்புக்கோட்டை சாலை, செங்கோட்டை விலக்கில் புதூர் முதல் செங்கோட்டை வரையிலான சாலையில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், விளாத்தி குளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் பேரூர் செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, பால கிருஷ்ணன், வேலுச்சாமி, கார்த்திகை முருகன், ராமலிங்கம் வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் வேலுச்சாமி, துரைப்பாண்டி யன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், புதூர் பேரூராட்சி துணைத் தலைவர், பச்சமலை சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    • மழைநீர் தேங்கும் இடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.
    • வாறுகால் வசதியை மேம்படுத்துவது குறித்தும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு 4-வது தெருவில் மழைநீர் தேங்கும் இடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு மழைநீர் செல்லுவதற்கு ஏதுவாக சாலை வசதியை மேம்படுத்தவும், வாறுகால் வசதியை மேம்படுத்தவும் ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி செண்பகராஜ், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், வார்டு செயலாளர் லெனின், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, வார்டு பிரதிநிதி இளையராஜா, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது.
    • விழாவில் பனைமரத்தில் விளையும் பொருட்களால் ஆன கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பனைமரத்தில் விளையும் பொருட்களால் ஆன கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நுங்கு, பண ஓலையினால் செய்யப்பட்ட கொழுக்கட்டை, என கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருட்கள் அனைத்துதரப்பினைரையும் கவர்ந்தது.

    இந்த நிகழ்வில் வட்ட வளர்ச்சி அலுவலர் தங்கவேல் குளத்தூர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, மாவட்ட குழு உறுப்பினர் மிக்கேல், நவமணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன், ராஜேந்திரன், ராஜ் மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி, ஒன்றிய அவைத் தலைவர் கெங்கு மணி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது.
    • பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.27 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணியையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஜே.எஸ்.டபுள்யூ. நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணை தலைவர் வேலுச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல், ஜே.எஸ்.டபுள்யூ நிறுவனம் சார்பில் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.27 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ×