என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூச்சிகள்"
- பூச்சிகள் இலைகளுக்கு அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் நிறம் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது.
- அதனை சாப்பிடுவதற்காக எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
திருவாரூர்:Methods of pest control in cotton crop
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது பருத்தி பயிருக்கு மண் அணைத்து உரங்களை இட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, தத்துப்பூச்சி மற்றும் மாவுப்பூச்சிகள் அதிக சேதத்தை உண்டு பண்ணுகின்றன.
இளம் பூச்சிகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் பருத்தி இலைகளுக்கு அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் நிறம் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. குறிப்பாக தத்துப்பூச்சி இலைகளின் சாற்றை உறிஞ்சும் போது அதனுடைய உமிழ்நீரில் உள்ள நச்சுக்கள் இலைகளில் ஊடுருவும் போது இலைகள் மஞ்சள் நிறமாகி மேலும் இலைகள் கீழ்நோக்கி குவிந்து திட்டுத்திட்டாக கரிதல் போன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். இதுவே தத்துப்பூச்சி எரிப்பு என்றும் கூறுவார்கள்.
சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது இலைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள் உதிர்ந்து விடும். இலை, தண்டு மற்றும் பூக்களில் கருமை நிறமாக இருப்பதை காணமுடியும். இதற்கு காரணம் என்னவென்றால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தேன் போன்ற திரவத்தை சுரக்கும். அதனை சாப்பிடுவதற்காக எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
மேலும் அந்த தேன் போன்ற திரவத்தில் இருந்து கேப்நோடியம் என்ற பூஞ்சானம் வளரும். இது போன்ற கருமை நிறமாக இருப்பதால் இலைகள் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி பயன்படுத்தவேண்டும். மஞ்சள் நிற ஒட்டும் பொறி அசுவினி மற்றும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்க மஞ்சள் நிற ஒட்டும் பொறியை ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
தாவரப் பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது எப். ஓ. ஆர். எஸ். 25 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்தலாம்.
வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வெற்றிசீலியம் லெக்கானி என்ற பூஞ்சானத்தை ஒரு எக்டேருக்கு 2.5 கிலோ பயன்படுத்த வேண்டும். செயற்கை பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் புப்ரோபெசின் 1000 மில்லி அல்லது டயபென்தியுரான் 600 கிராம் அல்லது இமிடாக்குளோபிரிட் 100 மில்லி அல்லது தயமீத்தாக்சாம் 100 கிராம் ஒரு எக்டேருக்கு பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒட்டுண்ணிகள் நோய் கிருமிகளின் வகைகளை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம்.
- தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த மெட்டாரைசியம்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை துறை சார்பில் வாத்தலைக்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை வகித்து பேசுகையில், பயிர்களில் தீங்கு செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு இயற்கை தந்த நன்கொடை பூச்சிகளின் இயற்கை எதிரிகள். இயற்கை உயிரினங்களை கொண்டு தீங்கு செய்யும் பூச்சி இனங்களை கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் முறை பூச்சி மேலாண்மை என்று பெயர். உயிரியல் காரணிகளான சாறுண்ணிகள், ஒட்டுண்ணிகள் நோய் கிருமிகளின் வகைகளைப் பற்றி விவசாயிகளிடையே விளக்கி கூறினார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உதவி பேராசிரியர் சுருளிராஜன் பேசியதாவது, ரசாயன பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளுக்கு பதிலாக உயிரியல் முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முக்கியத்துவத்தை விவசாயிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
மண் மூலம் பரவும் நாற்றங்கால் வேர் அழுகல், வாடல் நோய், இலை கருகல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் புளோரோசன்ஸ், தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த மெட்டாரைசியம், கருந்தலைப் புழு கட்டுப்படுத்த கிரைசொபொலா, மக்காச்சோளம் படைப்புழு கட்டுப்படுத்த வெவேரியா, சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த பச்சை இறகு பூச்சி போன்ற காரணிகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்றார்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புரத்தினம், உதவி வேளாண்மை அலுவலர் பாலசுந்தர், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தமிழழகன், நெடுஞ்செழியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- நெல் மூட்டைகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க வைக்கப்பட்ட கெமிக்கல் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
- தொடர் மழை பெய்து வருவதால் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்க புதிய தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் வீடு தூரம் விருட்சம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் வீடு தோறும் விருட்சம் திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் கவின்மிகு தஞ்சை இயக்கம், நாஞ்சிக்கோட்டை சிட்கோ சிறுகுறு தொழில் நல சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் ஏராளமானோர் மரக்கன்று நட்டு வைத்தனர்.
அப்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டம் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது வரை 50 ஆயிரத்தை தாண்டி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
நாம் மரக்கன்றுகள் நட்டால் மட்டும் போதாது .
அதனை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். மரக்கன்று மரமாக வளர வேண்டும்.
தஞ்சை அடுத்த திருமலை சமுத்திரத்தில் 220 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பெரிய அளவிலான மரங்கள் சரணாலயமாக மாற்றியுள்ளோம்.
தமிழகத்திலேயே இங்குதான் பெரிய அளவிலான மரங்கள் சரணாலயம் உள்ளது என்பது தஞ்சை மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை.
இதேபோல் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இசைவனம் உருவாக்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்க புதிய தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திறந்தவெளி கிடங்கிற்கும் பொறு ப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாஞ்சிக்கோட்டையில் உள்ள அரசு நெல் குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.
நெல்கள் எந்தவித சேததமும் அடையவில்லை. ஆனால் சாக்குகள், தார்பாய்கள் சேதம் ஆகின.
நெல் மூட்டைகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க வைக்கப்பட்ட கெமிக்கல் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், செயலாளர் ராம் மனோகர், இணைச் செயலாளர் முத்துக்குமார், சிட்கோ கிளை மேலாளர் ஆனந்த், கண்காணிப்பாளர் சவரிராஜன், சிட்கோ சிறு குறு தொழில் நல சங்க தலைவர் அண்ணாதுரை, செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
- தென்னைசாகுபடி, பூச்சிகள் மற்றும் நோய்களுக்கான தீர்வு நடவடிக்கைகள், உரங்கள் எப்போதெல்லாம் இட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் வேப்பங்குளத்தில் தேங்காய் கலப்பின உரமிடும் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தன்மைகள் குறித்து செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
துணை பேராசிரியர் டாக்டர் அருண்குமார் கலந்து கொண்டு செய ல்முறை விளக்கம்அளித்தார். இதில் தென்னைசாகுபடி, பூச்சிகள் மற்றும்நோய்களு க்கான தீர்வு நடவடிக்கைகள், உரங்கள் எப்போதெல்லாம் இட வேண்டும் என்பது குறித்து தோட்டக்கலை துணைப் பேராசிரியர் டாக்டர் அருண்குமார், நோயியல் உதவி பேராசிரியர் டாக்டர் சுருளிராஜன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்