search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலட்சுமி விரதம்"

    • பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.
    • கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

    மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு அஷ்ட லட்சுமிகளாகப் பிரித்துள்ளனர்.

    எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.

    லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது.

    அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள்.

    கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

    பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.

    வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும்.

    ஆடி மாத பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஆகஸ்ட 16ந் தேதி வரலட்சுமி விரதம் தினமாகும்.

    சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது.

    இதை செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும்.

    கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப்பெறுவார்கள்.

    இது தொடர்பான மேலும் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

    • இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.
    • ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப் பட்டாள்.

    விஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்து செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும்.

    விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள்.

    லட்சமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள்.

    விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே லட்சுமி ஆகும்.

    தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

    லட்சுமி தேவி பாற்கடலில் தோன்றினாள்.

    இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.

    ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப் பட்டாள்.

    தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக் குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதென கருதி நடந்தாள்.

    இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    • ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
    • வந்து பார்த்தபோது, அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது.

    ஒரு சமயம் லட்சுமி தேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வீடு, வீடாக சென்றாள்.

    ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

    இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது.

    மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

    நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டு இருந்தாள்.

    வாசலில் நின்ற லட்சுமியைப் பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள்.

    மனையைப் போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

    வந்து பார்த்தபோது, அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது.

    அதாவது லட்சுமி தேவி எங்கும், எப்பொழுதும் வேண்டுமானாலும் வருவாள்.

    வரலட்சுமி பூஜை செய்ய முடியாதவர்கள் மனம் உருகி வெள்ளிக்கிழமை பூஜை, வைபவ லட்சுமி பூஜை,

    குபேர லட்சுமி பூஜை என்று செய்து லட்சுமியை என்றும் அழைக்கலாம்.

    • பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.
    • வம்ச விருத்தி ஏற்படும்.

    லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும் அவை வருமாறு:

    1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்.

    2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.

    3. பகை அழிந்து அமைதி உண்டாகும்.

    4. கல்வி ஞானம் பெருகும்.

    5. பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.

    6. நிலைத்த செல்வம் அமையும்.

    7. வறுமை நிலை மாறும்.

    8. மகான்களின் ஆசி கிடைக்கும்.

    9. தானிய விருத்தி ஏற்படும்.

    10. வாக்கு சாதுரியம் உண்டாகும்.

    11. வம்ச விருத்தி ஏற்படும்.

    12. உயர் பதவி கிடைக்கும்.

    13. வாகன வசதிகள் அமையும்.

    14. ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.

    15. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

    • வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கை கூடும்.
    • எட்டுவித செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரட்சுமி வழங்குகிறாள்.

    1. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ,

    அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

    2. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

    3. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    4. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கை கூடும்.

    5. எட்டுவித செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள்.

    இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

    6.  காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை கோலமிட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

    கலசத்தில் லட்சுமியை ஆவாகனம் செய்து நிவேதனங்கள் படைத்து வழிபட வேண்டும்.

    7. மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும்.

    சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக் கூடாது.

    8. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

    9. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    10. இது ஒரு மங்களகரமான விரதம், மனதிற்கு நிம்மதி தரும் விரதம். இம்மையும் மறுமையும் தரும் இனிய விரதமாகும்.

    • ஸ்ரீ லட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம்.
    • நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும்.

    வரலட்சுமி விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து

    சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர்.

    ஸ்ரீ லட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம்.

    அருகம் புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் "நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்" என்பது சான்றோர் வாக்கு!

    கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும்.

    கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும்.

    மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.

    அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.

    நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

    பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும்.

    உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும்.

    அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

    இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.

    அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்!

    அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.

    இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும்.

    நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும்.

    வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

    • முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.
    • இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள்.

    வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம்.

    பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.

    விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு

    முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும்.

    அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும்.

    பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும்.

    ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.

    அதன்பிறகு வாசலில் உள் நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும்.

    மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து

    அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.

    இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள்.

    அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும்.

    அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம்.

    மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம்.

    இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லலாம்.

    "மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்" என்று மனம் உருக வணங்க வேண்டும்.

    பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

    • இதை செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம்.
    • வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.

    திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.

    வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வாரங்களில் இந்த பூஜையை செய்யலாம்.

    இதை செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம்.

    மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

    எல்லோராலும் மிக விரிவாக செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி,

    மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து,

    நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து,

    வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

    கொஞ்சம் சாஸ்திரபடி விரதமிருந்து பூஜையை செய்ய விரும்பினால், விநாயகர் பூஜை தொடங்கி,

    சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை,

    லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாக செய்யவேண்டும்.

    • வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும்.
    • உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்ரீ என்னும் திருமகளை (மகாலட்சுமி) அவளது ஸ்ரீயந்திரக் கோலத்தை நடுவீட்டில் வரைந்து ஸ்ரீஸ்துதியைக் கூறுங்கள்.

    இதில் எட்டு கோணங்களின் நுனியில் ஆவரண தேவிகள் நமக்கு அருள் கொடுப்பதற்காக காத்திருக்கின்றனர்.

    இதை வைத்திருந்தாலே லட்சுமி கடாட்சம் தேடி வருவதாக ஐதீகம்.

    வீட்டில் லட்சுமி பூஜை செய்வது எப்படி?

    வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும்.

    உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

    • பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ள வேண்டும்.
    • இப்படி செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள்.

    பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ள வேண்டும்.

    இப்படி செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதே போல், இந்த பூஜையில் பங்கேற்கும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள்,

    நல்ல கணவர் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வரலட்சுமியை வழிபடலாம்.

    அந்த வழிபட்டால் மனதில் எண்ணிய கணவர் வாய்ப்பார் என்பது நம்பிக்கை.

    • அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது.
    • அதை அப்படியே செய்தாள் சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.

    மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருதி இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை

    சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி,

    அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள்.

    அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது.

    மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.

    என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன்

    என்று சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள்.

    அதை அப்படியே செய்தாள் சாருமதி.

    இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.

    • இந்த அஷ்ட லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
    • பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

    வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்று தான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

    இந்த மகாலட்சுமியை

    தனலட்சுமி,

    தான்ய லட்சுமி,

    தைரிய லட்சுமி,

    ஜெயலட்சுமி,

    வீரலட்சுமி,

    சந்தானலட்சுமி,

    கஜலட்சுமி,

    வித்யாலட்சுமி

    என்ற அஷ்ட (எட்டு) லட்சுமிகளாக வழிபடுகிறோம்.

    வரலட்சுமி விரதம் அன்று இந்த அஷ்ட லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

    ×