என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நில நடுக்கம்"
- ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது
- ரிக்டர் அளவுகோளில் 3.1 என இந்த நில அதிர்வு பதிவாகியது
இந்திய தலைநகர் புது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்புற பகுதிகளில் இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.
இன்று மாலை 04:08 மணியளவில் அரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், டெல்லிக்கு தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வு, ரிக்டர் அளவுகோளில் 3.1 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடி விட்டனர்.
இது குறித்து அவசர கால பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ள டெல்லி காவல்துறை, லிஃப்டை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், கட்டிடங்கள், மரங்கள், சுவர்கள், தூண்கள் ஆகியவற்றின் அருகே நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 எனும் எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளது. இத்துடன் நில அதிர்வு காலங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.
புது டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் டெல்லியில் இம்மாதம் இது இரண்டாவது முறையாக நடைபெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத தொடக்கத்தில் டெல்லியை உள்ளடக்கிய வட இந்திய பகுதிகளில் அடுக்கடுக்காக ஏற்பட்ட நில அதிர்வுகள் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவானது குறிப்பிடத்தக்கது.
- நில நடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- நில நடுக்கத்தால் பெரும் துயரத்துக்கு உள்ளான மக்களுக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது பீதியை உண்டாக்கி இருக்கிறது.
அப்சின்:
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி கடந்த பிப்ரவரி 6-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்த நில நடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
நில நடுக்கத்தில் துருக்கி-சிரியாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பெறும் பாதிப்பை சந்தித்துள்ள துருக்கி, அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது.
இந்த நிலையில் துருக்கியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை அந்நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கே இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானதாக அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாக வில்லை. ஏற்கனவே நில நடுக்கத்தால் பெரும் துயரத்துக்கு உள்ளான மக்களுக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது பீதியை உண்டாக்கி இருக்கிறது.
- நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
- அருணாசல பிரதேசத்தில் அதிகாலையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அதே போல் அருணாசல பிரதேசத்தில் அதிகாலையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் சங்லாங் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.
- கவ்டா கிராமத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- நில நடுக்கங்களால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அகமதாபாத்:
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 6.38 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துதாய் கிராமத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் வடக்கு-வடகிழக்கே பதிவானது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.
அதற்கு முன்னதாக அதிகாலை 5.18 மணியளவில் கவ்டா கிராமத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கங்களால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
- மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
பப்புவா நியூ கினியா அருகே உள்ள நியூ அயர்லாந்து தீவு பிராந்தியத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது.
நில நடுக்கம் 100 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
- நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
- நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
காத்மாண்டு:
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம் பெல்கோட்கடி பகுதியில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்