search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் ஜெகன் பெரியசாமி"

    • வி.இ.ரோட்டில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • பணிகள் துரிதமாக நடைபெற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் போக்கு வரத்து நெருக்கடிக்கு தீர்வு கண்டு,சீரான போக்கு வரத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி, சாலை அமைக்கும் பணிகள் மற்றும் சாலையோர பகுதிகளில் நடை பாதைகள், வடி கால்கள் உள்ளிட்ட திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    போக்குவரத்து சீராக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் தாமோதரன்நகர் சந்திப்பு வி.இ.ரோட்டில் போக்கு வரத்து அதிகமாக இருப்பதாக வந்த தகவலை யடுத்து அந்தப் பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டு ள்ளது. இதைத்தொடர்ந்து ரவுண்டானா அமைய உள்ள இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பணிகள் துரிதமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெற்றது.
    • மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹோலி கிராஸ் மேல்நிலை பள்ளி மற்றும் பெற்றோர்கள் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 2- வது கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரவி, பிரம்மானந்தம், பாலன், கிங்ஸ்டன்,போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், சிரில், ஹோலி கிராஸ் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், பெற் றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதனை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில்100 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் அறுசுவையுடன் கூடிய மதிய உணவை வழங்கி பிறந்தநாள் விழாவை மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.

    முன்னதாக கனிமொழி எம்.பி.யின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் பகுதியில் பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வ ராஜ்,விண்மீன் டிரஸ்ட் பாலா, பகுதி செயலா ளர்கள் சுரேஷ், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ஜான்சிராணி, விஜயலட்சுமி துரை வானி மார்ஷல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்தரன், பாலன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் மற்றும் நிர்வாகிகள் செல்வக்குமார், அருண், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • 12 தீர்மானங்கள் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொட ங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ஸ்மார்ட்சிட்டி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகளை அளவிடு செய்யவும், செலவின பட்டியல் தயார் செய்யவும், பார்வையிடவும் போதிய பணியாளர்கள் இல்லாததால் இளநிலை பொறியாளர்களுக்கு உதவிட ஒவ்வொரு நிலையிலும் என 11 தொழில் நுட்ப உதவியாளர்கள் நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் நியமனம் செய்தல்.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டுரங்கன் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட போதிய இடம் இல்லாததால் சத்திரம் தெரு அம்மா உணவகம் பின்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 ஆரம்ப சுகாதார மையங்களில் நகர்புற வாழ்வாதார மையம் மூலம் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஊதியம் வழங்குதல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி, குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு செய்தல் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் 12 சிப்பங்களாக பிரித்து ரூ.20 கோடியே 35 லட்சத்தில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டம் 2022-2023-ன் கீழ் மேற்கொள்ளுதல்.

    மாநகராட்சி துணை மேயருக்கு அலுவலக பயன்பாட்டிற்கு ஒதுக்கப்ப ட்டுள்ள வாகனத்தை ஓட்டுவதற்கு தற்காலிக அடிப்படையில் ஓட்டுனர் நியமனம் செய்தல், இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி 2017 -ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களால் திட்ட நிதி மற்றும் பொது நிதியின் கீழ்மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை கட்டணம் 12 சதவீதம் வழங்க தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மத்திய அரசு கடந்த ஜூலை 13-ந்தேதி அறிவிப்பின்படி சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் 47-வது கூட்டத்தில் ஒப்பந்ததாரர்களின் 12 சதவீதத்திலிருந்து வரி 18 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 18-ந்தேதி . முதல் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பணியின் தொகைக்கு ஏற்ப உயர்த்தி வழங்குதல் உட்பட 12 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ்,ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
    • ஜனவரி 31-ந் தேதிக்குள் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று மேயர் உறுதி அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி புதிய பஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சுற்றிலும் நடைபெற்று வரும் வேலி அமைக்கும் பணி மற்றும் வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சிதம்பரநகர் பகுதியில் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை பணிகளில் 200 மீட்டர் மட்டுமே அமைக்க வேண்டியுள்ளது. அதனை பார்வையிட்ட மேயர் அப்பகுதி பொதுமக்களிடம் பேசுகையில், இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவு பெற்று இந்த சாலை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    தொடர்ந்து தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம், ஸ்பிக் நகர் பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதற்கு தீர்வு காணும் வகையில் அந்தப் பகுதியில் ஊராட்சி காலத்தில் அமைக்கப்பட்ட வடிகால்களை மீண்டும் சீரமைத்து மழைநீர் சாலையில் தேங்காமல் செல்ல ஏதுவாக வியாபாரிகள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதனையும் மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மேயரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் ராமச்சந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன், மாநகர கவுன்சிலர்கள் விஜயகுமார், சுயம்பு, ராஜதுரை, முத்துவேல், பச்சிராஜ், மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய சாலைகள் அமைய உள்ள பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
    • தெற்கு மண்டல அலுவலகத்தில் அலுவலர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெறப் போகும் பணிகள் குறித்தும், மழை நீர் தேங்கும் பகுதிகளில் புதிய வடிகால் வசதி, மற்றும் புதிய சாலைகள் அமைய உள்ள பகுதிகளையும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு ஆர்வமுடன் திரண்டு வந்து மேயரை வரவேற்ற பொதுமக்களிடம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகில் நீர் தேங்கும் பகுதி, ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பொது சுடுகாடு செல்லும் பாதை களில் வரும் நாட்களில் மழை நீர் தேங்காதவாறு வரும் நாட்களில் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் நேற்று முழுவதும் ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக தெற்கு மண்டல அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    அப்போது சொத்துவரி, தண்ணீர் கட்டண வசூலை துரிதப்படுத்துமாறும், பிளான் அப்ரூவல் குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடுமாறும் அதிகாரிகள், அலுவலர்களிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முள்ளக்காடு ஊர் எதிரில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஊரணிகுளம் தற்போது சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனை மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது குளத்தின் மேல்பரப்பு முழுவதும் பேவர்பிளாக் சாலை அமைத்து அதன் ஒரத்தில் கைப்பிடி கம்பிகள் வைத்து,பொதுமக்கள் ஒய்வெடுக்க ஏதுவாகவும், பொதுமக்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் பாதசாரிகள் பயன்படுத்த கழிப்பறைகள் அமைக்கவும், சுற்றிலும் மரங்கள் வைத்து, பென்சிங் அமைத்து பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஊரணி குளத்தினை சீரமைத்து இதுபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாகும். அதனை நிறைவேற்றி தரும் வகையில் மாநகர மேயர்ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அறிந்த மேயருக்கு முள்ளக்காடு வியாபாரிகள் சங்க தலைவர் முனிய தங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பாராட்டி நன்றி தெரிவித்தனர். மேயருடன் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் முத்துவேல், விஜய குமார்,ராஜதுரை சுயம்பு, பட்சிராஜ், வெற்றிச்செல்வன் மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையர் ராமசந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி, உதவி செயற்பொறியாளர் குறள்செல்வி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அன்பழகன் நூற்றாண்டு விழாவை தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
    • கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்குஅமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சி யின் முன்னாள் பொதுச்செய லாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

    இதில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மாநில பேச்சாளர் சரத்பாலா, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், சரவணன், கவிதாதேவி, ஜேசையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மாப்பிள்ளையூரணியில் சிலோன் காலணி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட அன்ப ழகன் படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் முற்றிலும் இலவச சேவையுடன் சர்வதேச தரத்திலான நவீன கழிவறைகள் அமைக்கப்படுகிறது.
    • 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள 1 லட்சம் குடும்பத்திற்கு தேசியக் கொடி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சியானது மக்களுக்கான மாநகராட்சி யாக திறம்பட செயல்பட்டு வருகிறது.

    தற்போது மாநகரின் எதிர்கால நலன் மற்றும் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக செய்து கொடுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சியை குப்பைகள் இல்லாத மாநகராட்சியாக மாற்றிட அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையிலான பணிகள் நாள்தோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது.

    மேலும் மாநகராட்சியின் 15-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாநகரிலுள்ள முக்கிய இடங்களிலும், அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் முற்றிலும் இலவச சேவையுடன் சர்வதேச தரத்திலான நவீன கழிவறைகள் அமைக்கப்படுகிறது. இந்த நவீன கழிவறைகள் முதல் கட்டமாக இரண்டு இடங்களில் அமைக்கப்பட இருக்கிறது. நமது இந்திய திருநாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள 1 லட்சம் குடும்பத்திற்கு தேசியக் கொடி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தூத்துக்குடி மாநகரில் நாளை (திங்கட் கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. வார்டு வாரியாக பணியாளர்கள் வீடுவீடாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×