search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடும் பேருந்து"

    • ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    திருமங்கலம்

    மதுரை தேனூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோதி முத்து. மதுரை ஆயுதப்படை யில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து கடந்தாண்டு உயிரிழந்தார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே தனலட்சுமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியபட் டியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தேனூருக்கு கிளம் பினார். திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து தேனூர் வழியாக செல்லும் ஊமச்சிகுளம் டவுன் பஸ் சில் ஏறி தனலட்சுமி அமர்ந் திருந்தார்.

    அப்போது அந்த பஸ்சில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி பஸ் சில் இருந்த மர்ம நபர் ஒருவர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்த பிறகே இதனை உணர்ந்த தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • திருச்சி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
    • இதுபற்றி அன்ன புஷ்பம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி அன்ன புஷ்பம் (வயது 65). இவர் பொன்மலைப்பட்டியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்காக லால்குடியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் தனது கைப்பையில் 7 பவுன் தங்கச் செயின் ஒன்றை எடுத்து வந்தார்.

    சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கும்போது கூட்ட நெரிசலில் அவரது கைப்பையை நகையுடன் திருடி சென்று விட்டனர். இதுபற்றி அன்ன புஷ்பம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நகையை லாவகமாக கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்.

    திருச்சி பஞ்சப்பூர் ஐயங்கார் பேக்கரி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான பைப் மற்றும் இரும்பு ராடுகள் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 250 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இதுபற்றி பாதாள சாக்கடை திட்ட பணியினை ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனத்தின் செயல் அலுவலர் தினேஷ் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி 22 மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி பீமா நகர் விவேகானந்தா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (57). இவர் திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் அவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது மர்ம ஆசாமி ஒருவன் அவர் கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றார்.

    இது குறித்து ஜானகி கோட்டை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி பாலக்கரை பீமா நகர் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் மஞ்சுளா (27). இவர் மார்சிங் பேட்டை பகுதியிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது பாலக்கரை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ரகுராம் (19), வரகனேரி நாயக்கர் தெரு பகுதியைச் சேர்ந்த ரகுநாத் (21), மண்ணச்சநல்லூர் மேல ஸ்ரீதேவிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தர்மசீலன் (23) ஆகிய மூன்று வாலிபர்களும் கத்தி முனையில் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று வாலிபர்களையும் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    ×