search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்கள் தகனம்"

    • பென்னாத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்
    • வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    அடுக்கம்பாறை:

    பென்னாத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார்.

    கூட்டத்தில், பென்னாத்தூர் பேரூராட்சியில் கலெக்டர் உத்தரவின் படி, எரிவாயு மின்மயானம் தகனமேடை மூலம் உடல்கள் தகனம் செய்ய வேண்டும். இதற்காக தகன மேடை அமைக்க இடம் தேர்வு செய்தல், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அயோத்தி தாஸ் பண்டிதர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அனுமதி கோருதல், பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து, பணியினை மேற்கொள்ள அனுமதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.
    • கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அடுத்துள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தர்மாபுரி புதுகாட்டு வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (90). இவரது மனைவி ஐயம்மாள் (85).

    இருவருக்கும் திருமணம் ஆகி 60 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற மகனும், மாரியம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

    முத்துசாமி, ஐயம்மாள் தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்தனர். முத்துசாமி நெசவுத்தொழில் செய்து வந்தார். ஐயம்மாள் கணவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவரை கவனித்து வந்தார்.

    வெளியிடங்களுக்கு போகும் போதும், திருமணம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் போது இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர்.

    இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக இருவரும் வீட்டிலேயே இருந்து வந்தனர். அவர்களை மகனும், மருமகளும் பராமரித்து வந்தனர். சம்பவத்தன்று மதியம் முத்துசாமி உயிரிழந்தார்.

    கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.

    உடனே உறவினர்கள் ஐயம்மாளை தூக்கி தண்ணீர் தெளித்தனர். ஆனால் எழுந்திரிக்காம லேயே கணவன் உடல் மீது உயிரைவிட்டார். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரை விட்ட சம்பவம் உறவினர்கள், ஊர்மக்களிடம் துக்கத்தை மேலும் அதிகரித்தது.

    இதனையடுத்து இறந்தவர்கள் உடலை அருகருகே வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி சலங்கபாளையம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று ஒரே மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

    கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×