என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத் கமல்"

    • டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
    • 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    இந்தியா சார்பாக 5 முறை ஒழும்பிக் போட்டிகளில் விளையாடிய தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வை அறிவித்துள்ளார்.

    சென்னையில் நேற்று நடந்த WTT ஸ்டார் போட்டியாளர் போட்டியின் 16வது சுற்றில் தோல்வியடைந்த பிறகு ஓய்வு பெறுவதாக சரத்கமல் அறிவித்தார்.

    42 வயதானால் சரத்கமல் 20 ஆண்டுக்கும் மேலாக இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்திவந்தார்.

    சரத் கமல், இதுவராவ் ஐந்து காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் பல வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

    டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சிறப்பாக விளையாடியதற்காக கேல் ரத்னா விருதை அவர் வென்றுள்ளார், மேலும் 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.

    • இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா சக நாட்டு வீராங்கனையான கிருத்விகா ராய்யிடம் சரண் அடைந்தார்.
    • தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் ஆஸ்திரேலியாவின் நிகோலஸ் லுமை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    சென்னை:

    உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் 11-8, 11-8, 11-9 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் நிகோலஸ் லுமை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வைல்டு கார்டு ஜோடியான இந்தியாவின் சரத்கமல்-சினேஹித் சுரவஞ்ஜிலா ஜோடி அரை இறுதியில் போராடி தோற்றது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கொரியாவின் லிம் ஜொங் ஹூன்-ஆன்கே ஹியூன் ஜோடியிடம் 11-9, 8-11, 9-11, 6-11 என்ற கணக்கில் தோற்றது.

    பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா 7-11, 10-12, 11-7, 9-11 என்ற செட் கணக்கில் ஹூவாங் யூ ஜியிடம் (சீனதைபே) அதிர்ச்சி தோல்வி கண்டார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 6-11, 9-11, 11-6, 11-4, 7-11 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான கிருத்விகா ராய்யிடம் சரண் அடைந்தார்.

    • நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.

    உலக தரம் வாய்ந்த சில நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக டைம்லிங்க்ஸ், பாரிஸ் ஒலிம்பிக் 2024-க்கான அதன் பிராண்ட் தூதராக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலை பெருமையுடன் அறிவித்துள்ளது.

    இதற்கான நிகழ்ச்சி டைம்லிங்க்ஸ் நிர்வாக இயக்குநர்கள் சிவகுமார், சித்ரா சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவரும், இந்திய அணியும் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட டைம் லிங்க்ஸ் வாழ்த்து தெரிவித்தது.

    ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். 10 முறை தேசிய சாம்பியனும் ஆவார். பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளையும் பெற்றவர்.

    • ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    புதுடெல்லி:

    33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    இந்நிலையில் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

    கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இம்முறை இந்திய அணி இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் என காமன்வெல்த் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார்.
    • இந்தியாவுக்காக ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

    இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், இந்த மாதம் சென்னையில் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது.

    சென்னையை சேர்ந்த 42 வயதாகும் சரத் கமல் இந்தியாவுக்காக ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.

    ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் என காமன்வெல்த் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார். 2004-ம் அண்டு நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக சர்வதேச அளவில் பதக்கம் வென்றார்.

    ஆசிய போட்டிகளில் இரண்டு முறை வெண்கல பதக்கமும், ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 4 பதக்கமும் வென்றுள்ளார்.

    42 வயது ஆனாலும் சரத் கமல் டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ளது. இளம் வீரரான மனவ் தக்காரை விட 18 இடங்கள் முன்னிலை பெற்றுள்ளார்.

    முதல் சர்வதேச தொடரை சென்னையில் தொடங்கிய சரத் கமல், சென்னையிலேயே தனது கடைசி போட்டியில் விளையாட இருக்கிறார்.

    • டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி, மலேஷிய ஜோடியை எதிர் கொண்டது.
    • ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்றைய போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்தனர்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி சரத் கமல், ஸ்ரீஜா அகுலா, மலேசிய ஜோடியான சூங் ஜாவன் மற்றும் லைன் கரேன் ஆகியோரை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய கலப்பு ஜோடி 11-4, 9-11, 11-5, 11-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

    முன்னதாக டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    • இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது.
    • நியூசிலாந்து மேலும் ஒரு தங்கம் வென்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குத்துச்சண்டை போட்டிகளில் 3 தங்கம் வென்றுள்ளனர்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, இங்கிலாந்தின் பால் டிரிங்கால்-லியம் பிட்ச்போர்டு ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 11-8, 8-11, 3-11, 11-7, 4-11 என தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை பெற்றனர்.

    இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது. அதேசமயம், நியூசிலாந்து இன்று மேலும் ஒரு தங்கம் வென்று 18 தங்கப் பதக்கங்களுடன், இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    ×