என் மலர்
நீங்கள் தேடியது "மீட்புபணி"
- விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சபரிமலைக்கு சென்ற 11 பக்தர்கள் வந்த கார் குமுளி அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சபரிமலை வந்த ஐயப்ப பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அவர் விபத்தில் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வந்த தமிழக பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்து மனம் வருந்தினேன். உறவினர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
- விழுப்புரம் சிறுவந்தாடு அடுத்த மோட்சகுளம் கிராமத்தில் பெருமாள் என்பவரது வீட்டில் 5 அடி நல்லபாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியது.
- அதனை பார்த்த பெருமாள் குடும்பத் தினர் பயத்தில் விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் சிறுவந்தாடு அடுத்த மோட்சகுளம் கிராமத்தில் பெருமாள் என்பவரது வீட்டில் 5 அடி நல்லபாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியது. அதனை பார்த்த பெருமாள் குடும்பத் தினர் பயத்தில் விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட உதவி தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன் மேற்பார்வையில் நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பெருமாள் வீட்டுக்கு சென்றனர். அங்கு படம் எடுத்த ஆடிக்கொண்டிருந்த நல்ல பாம்பை அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பிடித்தனர். பிடிக்கப்பட்ட நல்ல பாம்பினை வடபகுதி யில் உள்ள காட்டில் பத்திர மாக விட்டு சென்றனர் தீயணைப்பு வீரர்களின் இந்த செயல்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டி னார்.
- தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது.
சென்னை:
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்தித்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் காவலர் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்துவரும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுபற்றி தலைமை காவலர் தயாளன் கூறும்போது,
வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது என்று கூறினார்.
- 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.
- மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் முஜகொண்டா (30) இவரது மனைவி பூஜா (26) இவர்களுக்கு சாத்விக் என்ற 14 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு, எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். தற்போது மழையில்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா என்பவர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்டார்.
இதற்கிடையே நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சாத்விக் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். அப்போது குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஆக்ஸிஜன் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழ்துளை கிணற்று க்குள் கேமிராக்களை உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இரவானதால் மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தது. கர்நாடக மாநிலம் பெல்காம், கலபுரக்கி மற்றும் ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆழ்துளை கிணற்றை ஒட்டி இணையாக ஜே.சி.பி மூலம் குழி தோண்டி குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கி வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பூபாலன், போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவன் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் கை, கால்கள் அசைவதை கேமிரா மூலம் மீட்பு குழுவினர் உறுதி செய்தனர்.
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சாத்விக் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். அப்போது குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஆக்ஸிஜன் செல்ல ஏற்பாடு செய்தனர். மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதைதொடர்ந்து நள்ளிரவில் மீட்பு குழுவினர் தோண்டிய பள்ளத்தில் நடு நடுவில் பாறைகள் வந்ததால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது.
இதனையடுத்து இன்று காலை முதல் மீட்புப்பணியை தீவிரப்படுத்திய மீட்பு குழுவினர் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் தொடர்ந்து பணியாற்றி குழந்தையை உயிருடன் மீட்ட குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
#WATCH | Karnataka: A 1.5-year-old child was recused alive after he fell into an open borewell in the Lachyan village of Indi taluk of the Vijayapura district; visuals of the rescue carried out by NDRF and SDRF teams.
— ANI (@ANI) April 4, 2024
(Source: SDRF) pic.twitter.com/MtVRNPUz1u
- கால்நடைகளுடன் வெளியேறிய நிலையில் பெரும்பாலானோர் வீடுகளிலே தங்கி இருப்பதால் அவர்களை வருவாய் துறையினர் மீட்டு வருகின்றனர்.
- கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்கள் பகுதியிலேயே நிரந்தரமாக புயல் பாதுகாப்பு மையம் அமைத்து தர வேண்டும்.
சீர்காழி:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வரும் உபரி நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்தஉபரி நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நீரின் அளவும் வேகமும் குறையவில்லை. கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
திட்டு கிராமங்களில் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறிய நிலையில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளிலே தங்கி இருப்பதால் அவர்களை படகின் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீட்டு வருகின்றனர். மேலும் படகுகள் செல்ல முடியாத இடத்தில் உள்ள மக்கள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி தங்கள் உடமைகள் மற்றும் குழந்தைகள் சுமந்து கொண்டு கிராமத்தை விட்டு கரையேறி வருகின்றனர்
பாதிக்கப்பட்ட மக்களு க்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை விட்டு நிவாரண முகங்களுக்குச் செல்ல மறுத்து மக்கள் கரையிலேயே பந்தலமைத்து காத்துள்ளனர் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உணவு குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படும் பொழுது தங்கள் கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்கள் பகுதியிலேயே நிரந்தரமாக புயல் பாதுகாப்பு மையம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.