search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிராக் ஷெட்டி"

    • சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.
    • காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என வீழ்த்தியிருந்தது.

    தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    அரையிறுதியில் தைவான் ஜோடியை எதிர்கொண்டது. தங்களைவிட குறைவான தரவரிசையில் உள்ள தைவான் ஜோடியை மிகவும் எளிதாக வீழ்த்தியது.

    இந்திய ஜோடியின் ஆட்டத்தை தைவான் ஜோடியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட் கேமில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீன ஜோடியை எதிர்கொள்கிறது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா ஏமாற்றம் அடைந்தார்
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் வெற்றி பெற்றார்.

    தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-16, 21-11 என நேர்செட் கேமில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சலிகா உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹான் யூயே-வை எதிர்கொண்டார். இதில் அஷ்மிதா 15-21, 21-12, 12-21 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் காலிறுதிக்கு முன்னேறினார். 84-வது தரவரிசையில் உள்ள இவர் 54-வது தரவரிசையில் இருக்கும் மேட்ஸ் கிறிஸ்டன்சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-14, 22-20 என வெற்றி பெற்றார்.

    • சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்தியது.
    • 16-21, 15-21 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரவில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்தியது.

    இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை 16-21, 15-21 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.

    • பாரிஸ் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான இடம். இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
    • எங்களுக்கு 2-வது சொந்த இடம் போன்றது. ஒலிம்பிக் போட்டிக்கான டெஸ்ட் இடம். ஆனால், இன்னும் சில மாதங்கள் உள்ளன.

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி- சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி தைவானின் பி.ஹெச். யாங்- ஜே.எச். லீ ஜோடியை எதிர்கொண்டது.

    முதல் செட்டை 21-11 என எளிதாக கைப்பற்றியது இந்திய ஜோடி. ஆனால் 2-வது செட்டில் தைவான் ஜோடி கடும் சவால் விடுத்து அடுத்தடுத்து புள்ளிகள் கைப்பற்றியது என்றாலும், இந்திய ஜோடி 2-வது செட்டிடையும் 21-17 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றது சிறப்பான தருணம். இந்த இடத்தில் விளையாடிய போட்டிகளில் சிறந்த போட்டிகளில் ஒன்று என சிராக் ஷெட்டி தெரிவித்துள்ளது.

    மேலும், இது தொடர்பாக சிராக் ஷெட்டி கூறுகையில் "கடந்த சில வாரங்களாக தைவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறந்த எதிர் ஜோடியை எதிர்கொண்டு அவர்களை வீழ்த்தியது. அவர்களை எளிதாக எடுத்து கொள்ளக் கூடாது என்பது எங்களுக்கு தெரியும்.

    அவர்களுடைய தரவரிசையில் உயர்ந்ததாக இல்லை. ஆனால் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் செட்டை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. 2-வது செட்டின் தொடக்கத்தில் சற்று நடுக்கம் இருந்தது. அதன்பின் சுதாரித்துக் கொண்டு கைப்பற்றி விட்டோம்.

    இந்த வெற்றியை மிகவும் மகிழ்ச்சியானதாக உணர்கிறேன். பாரிஸ் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான இடம். இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். எங்களுக்கு 2-வது சொந்த இடம் போன்றது. ஒலிம்பிக் போட்டிக்கான டெஸ்ட் இடம். ஆனால், இன்னும் சில மாதங்கள் உள்ளன.

    ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்தில் சந்தோசத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறினர். அது பொய்யாக இருக்கும். நாங்கள் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த வாரம் இன்னொரு தொடர் உள்ளது. இதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் மெண்டி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில், இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்தியா 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    ×