என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மலையில்"
- மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்துக்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திலும், 2 கிலோ மீட்டர் அகலத்திலும் சருவ மலை உள்ளது.
- இந்நிலையில் சருவ மலையில் நேற்று மாலை அணியாபுரம் கொங்குளத்தூர், மாரியம்மன் கோவில் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்துக்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திலும், 2 கிலோ மீட்டர் அகலத்திலும் சருவ மலை உள்ளது.
மேய்ச்சல் நிலம்
இந்த மலையை சுற்றி அணியாபுரம், தோளூர் எம்.ராசாம்பாளையம், மணியாரம்புதூர், கணவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்த சருவ மலையில் ஏராளமான பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. இந்த மலையை சுற்றி வசிக்கும் கிராம மக்கள், தங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக இந்த சருவ மலையை பயன்படுத்தி வருகின்றனர். கால்நடைகளை தினசரி ஓட்டிச் சென்று மேய்த்து வருகின்றனர்.
தீப்பிடித்தது
இந்நிலையில் சருவ மலையில் நேற்று மாலை அணியாபுரம் கொங்குளத்தூர், மாரியம்மன் கோவில் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் இந்த தீ மளமளவென எரிந்து சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதனால் சருவ மலையில் உள்ள ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் சருவ மலையில் தீ எரிந்து கொண்டிருக்கும் பகுதிக்கு விரைந்தனர். இந்த மலையில் எந்த பகுதியிலும் சாலை வசதி இல்லாததால், தீயணைப்பு வீரர்களால் தீ எரிந்து கொண்டிருந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை.
பலவகை மரங்கள் எரிந்து நாசம்
இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதியில் ஏறி, அங்குள்ள செடி, கொடிகளை கொண்டு தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். இந்த தீயால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து வனத்துறையினரும், இரவு முழுவதும் போராடி சுமார் 1.30 மணியளவில், தீயை முழுவதுமாக அனைத்து கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் தீயில் சருவ மலையில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் எரிந்து நாசமாயின. இதுபோன்று சருவமலையில் அடிக்கடி தீ ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- தொடர் மழையால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
- இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
சேலம்:
வடகிழக்கு பருவமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பெய்து மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
மாவட்டத்தில் இன்று காலையும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தம்மம்பட்டி, மேட்டூர், கடையாம்பட்டி, ஏற்காடு, சங்ககிரி, ஆத்தூர், வீரகனூர், கரிய கோவில், ஆனைமடுவு ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வீரகனூர் - 23, சங்ககிரி - 16.3, ஏற்காடு - 12.6, ஆத்தூர்-9, ஆனைமடுவு - 9, கரிய கோவில் - 5, பெத்தநாயக்கன்பாளையம் - 5, செங்கவல்லி - 5, மேட்டூர் -4.4, தம்மம்பட்டி - 4, எடப்பாடி - 3, கடையாம்பட்டி - 3, சேலம்- 2.4 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 101.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் (வயது 38). இவருக்கு திவ்யபாரதி (35) என்ற மனைவியும்,லோகேஷ், விஷ்ணு என்ற 2 மகன்களும் உள்ளனர். ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பாறைக்குள் வெடிமருந்தை திணித்து பாறைகளை வெடிக்க வைத்தபோது அதிலிருந்து சிதறிய கற்கள் ரோஷனின் தலையில் பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த ரோஷன் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்