search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகள் விலை"

    • விழிபிதுங்கும் சாமானிய மக்கள்
    • வேலூரில் நாளுக்கு நாள் உயருகிறது

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறி விலையும் புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது.காய்கறிகளின் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்துள்ளது.

    2 வாரங்களுக்கு முன்பு வாங்கிய காய்கறிகளை தற்போது 2 மடங்குக்கும் கூடுதல் விலையை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    காய்கறி விலை உயர்வின் தாக்கம், வேலூர் நேதாஜி மார்க்கெட்டிலும் எதிரொலிக்கிறது. சின்ன வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பூண்டு, கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, அவரைக்காய் கருணைக் கிழங்கு, கத்தரிக்காய், நூக்கல், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துவிட்டது.

    இதேபோல், சுரைக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலையும். கணிசமாக உயர்ந்துள்ளன. வெங்காயம், புடலங்காய், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையில் மட்டும் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

    2 வாரங்களுக்கு முன்பு 35 ரூபாய்-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, தற்போது ரூ.80-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-ல் இருந்து ரூ.120, பூண்டு ரூ.140-ல் இருந்து ரூ.160, இஞ்சி ரூ.200-ல் இருந்து ரூ.240, அவரைக்காய் ரூ.80-ல் இருந்து ரூ.100, கத்தரிக்காய் ரூ.60-ல் இருந்து ரூ.80, நூக்கல் ரூ.60-ல் இருந்து ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.60-ல் இருந்து ரூ.100, பச்சை மிளகாய் ரூ.80-ல் இருந்து ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், இதர காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந் துள்ளன.

    காய்கறிகளின் விலை உயர்வால் பாதிக்க ப்பட்டுள்ள பொதுமக்கள் கூறும்போது, "அனைத்து தரப்பு மக்களும் காய்கறிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். தினசரி பயன்படுத்தும் சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு என்பது எங்களது பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கிறது.

    காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், குறிப்பாக சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

    மழையால் விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு என கூறி காய்கறிகளின் விலையை வியாபாரிகள் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே, விலை உயர்த்தப்பட்டுள்ள காய்கறிகளை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மற்றும் வேளாண் துறை சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், பழனி, ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷங்கள் வருவதால் காய்கறிகளின் தேவைகள் மேலும் அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட உள்ளதால் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படு வதால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.10 முதல் ரூ.40 வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

    குறிப்பாக கடந்த வாரம் ஒரு ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காயும் கிலோ ரூ. 20 உயர்ந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    புடலங்காய்-40-50, பீர்க்கங்காய்-60, பாவை காய்-50, முள்ளங்கி-50, இஞ்சி- 90, பீட்ரூட்-60, பீன்ஸ்-80, கேரட்-100-110, மிளகா-50, முட்டை க்கோஸ்-25, காலிப்ளவர்-40-60, உருளைக்கிழங்கு-50, கருப்பு அவரை, பட்டை அவரை-60, சின்ன வெங்காயம்-40, பெரிய வெங்காயம்-30.

    முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 விற்ற நிலையில் இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. இதைபோல் தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து அடியோடு சரிந்து உள்ளது. பொதுவாக வ.உ.சி. காய்கறி மார்க்கெட் 5000 முதல் 7000 பெட்டிகள் வரை தக்காளி வரத்தாகி வந்தது. இன்று வெறும் ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தக்காளிகள் வரத்தாகின.

    இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. அதன் பிறகு ஒரு கிலோ ரூ.30-45 வரை விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். எனினும் இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்குள் சரியாகி விடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த மாதம் இறுதி வரை தினசரி 480 முதல் 500 லாரிகள் வரை காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது.
    • கடந்த சில நாட்களாகவே மழை காரணமாக சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறையத்தொடங்கி உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த மாதம் இறுதி வரை தினசரி 480 முதல் 500 லாரிகள் வரை காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மழை காரணமாக சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறையத்தொடங்கி உள்ளது.

    இன்று 400 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துதது.

    இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    தக்காளி-ரூ.11,

    நாசிக் வெங்காயம்-ரூ.22,

    ஆந்திரா வெங்காயம்-ரூ.12,

    சின்ன வெங்காயம்-ரூ.35,

    உருளைக்கிழங்கு-ரூ.30,

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.25,

    வரி கத்தரிக்காய்-ரூ.15,

    அவரைக்காய்-ரூ.55,

    வெண்டைக்காய்-ரூ.20,

    பீன்ஸ்-ரூ.80,

    கேரட்-ரூ.55,

    பீட்ரூட்-ரூ.20,

    முட்டைகோஸ்-ரூ.18,

    முருங்கைக்காய்-ரூ.15,

    முள்ளங்கி-ரூ.13,

    புடலங்காய்-ரூ.20,

    நைஸ் கொத்தவரங்காய்-ரூ.30

    வெள்ளரிக்காய்-ரூ.20,

    மலபார் வெள்ளரி-ரூ.6,

    சுரக்காய்-ரூ.15,

    பாகற்காய்-ரூ.35,

    காலி பிளவர் ஒன்று-ரூ.10,

    பீர்க்கங்காய்-ரூ.40,

    பச்சை மிளகாய்-ரூ.35

    சக்கரவள்ளி கிழங்கு-ரூ.25

    எழுமிச்சை பழம்-ரூ.80.

    ×