என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடைபிடிப்பு"
- மதுரையில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கடைபிடிக்கப்பட்டது.
- தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று முதல் 8-ந் தேதி வரை ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
2019-20-ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ''ஆட்சிமொழிச் சட்ட வாரம்" ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று (1-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள் அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி நடத்தியும், அரசு அலுவலர்களுக்கு கணினித் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கு பயிற்சி அளித்தும், மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்களுடன் பட்டிமன்றம் நடத்தியும், ஒன்றியம், வட்ட அளவில் அரசு பணியாளர்கள், பொதுமக்கள், தமிழ் அமைப்புகளுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தியும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டா டப்பட உள்ளது.
தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொள்ள தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரத்தை சிறப்பாக கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க உறுப்பினர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மண்டல இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34-வது சங்க அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்தி ராஜு தலைமை தாங்கினார். சங்க கொடியை மாநில துணைத் தலைவர் மாரியப்பன் ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் குருசாமி அமைப்பு தினப் பேருரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க உறுப்பினர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்