search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்"

    • சேலத்தில் தடைசெய்யப்பட்ட 103 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • தடை செய்யப்பட்ட பொருட்–களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் சுமார் 103 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கேரி பேக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை உபயோகம் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்குமாறும், நெகிழி கேரி பேக்கிற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தவறும்பட்சத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    • வட்டார சுகாதார அலுவலர் சிவகுரு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • உணவு பொருட்கள், போலி சிகரெட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள நகரத்தின் முக்கிய வீதிகளான பஸ் நிலையம், ஸ்தூபிமைதானம், எம்.ஜி.ரோடு, கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார சுகாதார அலுவலர் சிவகுரு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஹான்ஸ், குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையைடுத்து அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் டம்ளர், காலாவதியான பிஸ்கட் பாக்கெட், உணவு பொருட்கள், போலி சிகரெட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஓட்டல்,பேக்கரி கடைகள், பல்பொருள் அங்காடிகள், நடைபாதை கடைகள்,டீ கடைகள்,சாலையோர தனியார் பால் விற்பனை கடைகள், மொத்த மற்றும் சில்லறை மளிகை கடைகளிலும் 300 கிலோ பிளாஸ்டிக், 70 கிலோஹான்ஸ், 70 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

    இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற்ற பிளாஸ்டிக் மறுசுழற்சியாளரிடம் வழங்கிட வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் சாந்தி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கூட்டரங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை குறித்து மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத நிலையினை உருவாக்கு வதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

    அனைத்து துறை தலைவர்களும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் அன்றாடம் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக தரம் பிரித்து பிளாஸ்டிக் மறு சுழற்சியாளரிடம் வழங்க வேண்டும்.

    மேலும் மருத்துவத்துறையின் மூலம் மாவட்டத்திலுள்ள அரசு தருமபுரி மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அன்றாடம் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற்ற பிளாஸ்டிக் மறுசுழற்சியாளரிடம் வழங்கிட வேண்டும்.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பையின் பயன்பாட்டினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்திட வேண்டும். தருமபுரி மாவட்டத்தை நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு அனைத்து அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.

    முன்னதாக, 75-வது சுதந்திர தினவிழா அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சாந்தி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    இதனைதொடர்ந்து, 75 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தேசியக் கொடி மற்றும் மஞ்சப்பையுடன் கூடிய மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுவாமிநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×