என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈத்தாமொழி"
- மின்கம்பம் மீது மோதியது
- ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
ஈத்தாமொழி அருகே கீழ கிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் தங்கபாண்டியன் இவரது மகன் வினோத் (வயது 24). மேலகிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் சதீஷ் (20), இலந்தையடி தட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்ராம் (22) இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
நேற்று இரவு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மேலகிருஷ்ணன் புதூர்-ஈத்தாமொழி சாலையில் சென்று கொண்டிருந்தனர். செம்மங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் இவர்களின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறு மாறாக ஓடியது. திடீரென ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோட் டார் சைக்கிள் மோதியது.
மோதிய வேகத்தில் வினோ,சந்தோஷ் ராம், சதீஷ் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வினோ பரிதாபமாக இறந்தார்.சந்தோஷ் ராம், சதீஷ் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
விபத்து குறித்து ஈத்தா மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலி யான வினோவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கி றது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமா னோர் அங்கு திரண்டு உள்ளனர். வினோ பலியான சம்பவம் அவரது நண்பர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மர்மநபர்கள் கைவரிசை
- சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு
நாகர்கோவில்:
ஈத்தாமொழி அருகே கேசவன் புத்தன் துறை பகுதியில் தூய மாசற்ற திரு இருதய அன்னை ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் எதிர்ப்புறம் மிக்கேல் அதிதூதர் குருசடி ஆலயம் அமைந்துள்ளது.
இந்த குருசடியில் காலை மாலை நேரங்களில் பிரார்த்தனை நடைபெறும். நேற்று காலை வழக்கம் போல் பிரார்த்தனை முடிந்து அனைவரும் சென்றனர். மாலையில் பிரார்த்தனைக்கு வந்த போது குருசடி இருந்த மிக்கேல் அதிதூதர் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை மாயமாக இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தன.ர் கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி னார்கள். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.
கொள்ளை நடந்த பகுதியிலிருந்து மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு யாரோ இந்த கைவரிசையில் ஈடுபட் டுள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்க ளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- மது வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது வாக்குவாதம்
- ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
ஈத்தாமொழி அருகே உள்ள தருமபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 50)தொழிலாளி. இவர் கடந்த 22- ந் தேதி மாலை 5 மணி அளவில் அத்திக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தார்.
அப்போது கோட்டார் கலைநகரை சேர்ந்த ரஞ்சித் என்ற ரஞ்சித் குமாரும் (26) மதுபானம் வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் மகாலிங்கத்திற்கும் ரஞ்சித் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மறுநாள் மாலை அதே டாஸ்மாக் கடைக்கு மகாலிங்கம் சென்றுள்ளார். வழியில் கொய்யன் விளை பகுதியில் வைத்து ரஞ்சித் குமாரும் அவருடைய நண்பர் மணியன் விளையைச் சேர்ந்த கனகராஜ் (34) என்பவரும் வழிமறித்து மகாலிங்கத்தை தலை, கை, கால் உட்பட பல இடங்களில் அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த இரண்டு மது பாட்டில்கள், மற்றும் பணத்தையும் பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த மகாலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈத்தாமொழியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மகாலிங்கம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஈத்தா மொழி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாமி வழக்கு பதிவு செய்தார். ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மேல் விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் மகா லிங்கத்தை அரிவாளால் வெட்டிய ரஞ்சித் குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். ரஞ்சித் குமார் தற்போது தெற்கு சூரங்குடி அருகே உள்ள இலந்தைய டித்தட்டு பகுதியில் வசித்து வருகிறார். இவரது பெயர் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தலைமறைவாக உள்ள ரஞ்சித் குமாரின் நண்பர் கனகராஜை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
- போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- சிறுமியின் தந்தை, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார்
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கணபதி (வயது 76) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீ சில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணபதியை கைது செய்தனர்.
- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் இருந்து குளச்சல் செல்லும் கடற்கரை சாலையில் ஈத்தாமொழி சந்திப்பில் சாலையோரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது.
இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் பீய்ச்சடித்தபடி வெளியேறுகிறது.
குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குடிநீர் வீணாவதோடு, சாலையில் தேங்கி சேறும், சகதியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
மேலும் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்ைதகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது பற்றி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதுவரை குழாய் உடைப்பு சீரமைக்கப்பட வில்லை.
உடைந்த குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் கடைகள் முன்பு தேங்கி நிற்பதால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்