என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போதை ஒழிப்பு"
- போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன்.
- விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான்முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்துஅவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன் என போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.
தொடர்ந்து, போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பேரணியை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தொடங்கி வைத்தார்.
- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
செங்கோட்டை:
செங்கோட்டை காவல்துறை மற்றும் எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. செங்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர குமார் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்று பேசினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பேரணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள் பேரணியாக வாஞ்சி நாதன் சிலை, கீழபஜார், காவல்நிலையம், தாலுகா அலுவலகம் வழியாக சென்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் இளவரசன் ஆகியோர் எடுத்துக் கூறினர். நிகழ்ச்சியில் காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் திர ளாக கலந்து கொண்டனர். பள்ளி உடற் கல்வி இயக்கு னர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.
- போதைப்பொருள் ஒழிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி மாணவிகள் சாலையில் நடந்து சென்றனர்.
- போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பதாகைகள் ஏந்தியும் வாசகங்களையும் கூறினர்.
உடுமலை :
உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பொறுப்பு ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலையில் தமிழ் ஆசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ரம்யா ஆகியோர் வழி நடத்தினர். போதைப்பொருள் ஒழிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி மாணவிகள் சாலையில் நடந்து சென்றனர்.
போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பதாகைகள் ஏந்தியும் வாசகங்களையும் கூறினர். பள்ளியில் மாணவிகள் மது ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். பல்லடம் தமிழ் சங்கத்தலைவர் ராம். கண்ணையன், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். போதை ஒழிப்பு மன்றத்தை துவக்கி வைத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேசுகையில்:-
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வரும் காலத்தில் போதைப் பொருள் இல்லா தமிழகமாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய மாணவர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். இந்த போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கடைப்பிடித்து போதைப் பொருள் இல்லா தமிழகமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் அண்ணா துரை, பாலசுப்பிரமணியம், தமிழ்ச்சங்க செயலாளர் கருப்புசாமி, மற்றும் சுரேஷ், கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா்.
- போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா்.
திருப்பூர் :
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2, திருப்பூா் வடக்கு காவல் நிலையம் ஆகியன சாா்பில் போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி மாநகராட்சி வெள்ளிவிழாப் பூங்காவில் நடைபெற்றது.
நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திருப்பூா் வடக்கு சரக உதவி ஆணையா் அனிக்குமாா் பேசினாா்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வை கலை நிகழ்ச்சி மூலமாக ஏற்படுத்தியதுடன் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.
- சமயநல்லூர் சரக பள்ளிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- போதையினால் ஏற்படும் தீமைகளை விளக்கி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
வாடிப்பட்டி
சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை, சோழவந்தான், காடுபட்டி, வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போதைஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. போதையினால் ஏற்படும் தீமைகள், நோய்கள், பாதிப்புகள், ஒழிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கி உறுதிமொழிகள், கருத்தரங்குகள், வினாடி-வினாபோட்டி, பேச்சு, ஓவிய, கட்டுரைபோட்டி நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
அதேபோல் பள்ளிகள், கோவில்கள், பஸ்நிலையங்கள், மார்கெட்டுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ''காவல்துறைஅறிவிப்பு'' என்ற தலைப்பின்கீழ் போதைபொருட்களான கஞ்சா, புகையிலை, குட்கா, மது போன்றவை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தெரியவந்தால் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், காவல்நிலையங்களின் தொலைபேசி, கைபேசி எண்களை குறிப்பிட்ட பதாதைகள் வைக்கப்பட்டு சமயநல்லூர் போலீஸ்சரகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- போதை ஒழிப்பை வலியுறுத்தி மதுரையில் போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
- மதுரை பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, தெற்கு காவல் கூட தெரு வழியாக பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
மதுரை
மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில் சுமார் 150 போலீசார் மோட்டார் சைக்கிள்களுடன் கலந்து கொண்டனர்.
பேரணியை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார், உதவி கமிஷனர்கள் செல்வின் (டவுன்), மாரியப்பன் (தல்லாகுளம்), இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக் (திலகர் திடல்), ரமேஷ்குமார் பெரியார்- மத்தி), கணேஷ்ராம் (தெற்கு வாசல்), சுரேஷ் (தல்லாகுளம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசரடியில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணி காளவாசல், பைபாஸ் ரோடு, எல்லீஸ் நகர், பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, தெற்கு ஆவணி மூல வீதி, தெற்கு காவல் கூட தெரு வழியாக பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்