என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பீட்ரூட்"
- ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது.
- ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும்.
உடுமலை :
குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. பீட்ரூட் மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. பீட்ரூட் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில் அறுவடை செய்யும் வகையில் சில நாட்கள் இடைவெளி விட்டு விதைக்கப்படுகிறது.
பீட்ரூட் சாகுபடி செய்தால் 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பீட்ரூட் சாகுபடி செய்வது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகிறது. கோடைகாலங்களில் பீட்ரூட் மகசூல் குறைந்தும், குளிர்காலத்தில் மகசூல் அதிகரித்தும் காணப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும். கடந்த காலங்களில் ஒரு கிலோவிற்கு சராசரியாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வியாபாரிகள் தோட்டங்களுக்குள் நேரடியாக வந்து அறுவடை செய்து கழுவி சுத்தம் செய்து பைகளில் அடைத்து எடுத்துச் செல்கிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் பீட்ரூட் உடுமலை, பொள்ளாச்சி மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பீட்ரூட் விற்பனைக்காக பைகளில் அடைக்கப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பீட்ரூட் ரூ.5 முதல் ரூ. 7 வரை மட்டுமே விற்பனை ஆகிறது என்றனர்.
- காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை கடந்த சில மாதங்களாக நிலையாக இருப்பதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
அரவேணு:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலான கூக்கல்தொரை, சீகுளா போன்ற பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஆங்கில காய்கறிகள் புரூக்கோலி, சுகுனி, சுல்தானை ஐஸ் பிரேக் போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது மலை காய்கறிகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பீட்ரூட் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதை அறுவடை செய்து கழுவி, கோத்தகிரி, ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை கடந்த சில மாதங்களாக நிலையாக இருப்பதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, விதை மற்றும் இடு பொருட்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு, வங்கிகளில் இருந்து கடன் பெற்று காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். தற்போது மலை காய்கறிகளின் கொள்முதல் விலை சற்று உயர்ந்து வருகிறது.
காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பீட்ரூட் கொள்முதல் விலை நிலையாக இருப்பதுடன் இந்த விலை போதுமானதாக உள்ளது. எனவே பீட்ரூட்டை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தோட்டத்தில் பசுமாடு ஒன்று மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தது.
- கணபதிபாளையம் கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது தோட்டத்தில் பசுமாடு ஒன்று மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தது.இது குறித்து கணபதிபாளையம் கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பரிசோதித்த உதவி மருத்துவர் அறிவு செல்வன், உணவுக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும், பீட்ரூட் உணவு குழாயில் அடைத்திருப்பதாக தெரிவித்த அவர், மாட்டின் வாய்க்குள் கைகளை நுழைத்து முழு பீட்ரூட்டை வெளியே எடுத்தார். இதன்பின், மாடு சகஜ நிலைக்குத் திரும்பியது. உதவி மருத்துவர் கூறுகையில், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை முழுமையாக கால்நடைகளுக்கு உணவாக வழங்குவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடும் கால்நடைகளின் உணவு குழாயில் அடைத்து கால்நடைகளின் உயிருக்கே ஆபத்தாகும் அபாயம் உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்