search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மலை காய்கறியான பீட்ரூட் அறுவடை தீவிரம்
    X

    கோத்தகிரியில் அறுவடை செய்த பீட்ரூட்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மலை காய்கறியான பீட்ரூட் அறுவடை தீவிரம்

    • காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை கடந்த சில மாதங்களாக நிலையாக இருப்பதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலான கூக்கல்தொரை, சீகுளா போன்ற பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஆங்கில காய்கறிகள் புரூக்கோலி, சுகுனி, சுல்தானை ஐஸ் பிரேக் போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.

    தற்போது மலை காய்கறிகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது பீட்ரூட் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதை அறுவடை செய்து கழுவி, கோத்தகிரி, ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

    காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை கடந்த சில மாதங்களாக நிலையாக இருப்பதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, விதை மற்றும் இடு பொருட்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு, வங்கிகளில் இருந்து கடன் பெற்று காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். தற்போது மலை காய்கறிகளின் கொள்முதல் விலை சற்று உயர்ந்து வருகிறது.

    காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பீட்ரூட் கொள்முதல் விலை நிலையாக இருப்பதுடன் இந்த விலை போதுமானதாக உள்ளது. எனவே பீட்ரூட்டை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×