search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் திடீர் சாவு"

    • சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவர் திடீர் என்று இறந்தார்.
    • ராசிபுரம் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற இடத்தில் இந்த சோகம் நிகழ்ந்தது.

    ராசிபுரம்:

    சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் சர்வேஸ்வரன் (வயது 11). சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சர்வேஸ்வரன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கோடை விடுமுறை என்பதால் ரஞ்சித் தனது குடும்பத்தினருடன் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு வந்துள்ளனர். நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர். குளித்துவிட்டு மேலே வந்த மாணவன் சர்வேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்தான்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் மல்லூர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சர்வேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி பெரியவீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி ஜீவா. இவர்களது மகன் விமல்(வயது18).

    இவர் காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விமல் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் பள்ளிக்கு சரியாக செல்லாமல் விமல் சுற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விமல் வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று விமல் தான் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்தின் முன்பு அதிக போதையில் படுத்து இருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் 3 பேர் அங்கு சென்று விமலை எழுந்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுரை கூறினர். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தகராறாக மாறியது. அப்போது அவரது நண்பர்கள் விமலை தாக்கி உள்ளனர். இதனால் போதையில் இருந்த விமலுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பயந்து போய் அங்கிருந்து சென்றனர்.

    விமல் வலிப்பால் துடிப்பதைக் கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வி ரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மாணவரின் தாயார் ஜீவா அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து மாணவர் விமலை தாக்கிய அவரது நண்பர்களான 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×