search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பஸ்"

    • விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா பஸ்சை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுற்றுலா பஸ் டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய நுழைவு வாயில் அருகே அதிகாலை 4.30 மணிக்கு நின்றிருந்த வாலிபர் மீது அந்த வழியாக வந்த சுற்றுலா பஸ் மோதிவிட்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையறிந்து விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் அந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினர். அதோடு விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா பஸ்சை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பஸ் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் நின்றிருந்த வாலிபர் மீது மோதியதும், அதில் படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்காமல் டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோர், அந்த வாலிபரை தூக்கி சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது. மனிதநேயமற்ற இந்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுற்றுலா பஸ் டிரைவர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. இதனால் தேங்கிய மழைநீரின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினர்.
    • மணல் அதிகமாக கொட்டியிருந்ததால் முழுவதுமாக பஸ் கவிழாமல் பாதி அளவு சாய்ந்தது .

    கடலூர்:

    கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா பஸ் சென்றது. கடலூர் அடுத்த செம்மங்குப்பம் பகுதிக்கு பஸ் வந்தபோது சாலையின் ஒருபுறத்தில் நேற்று பெய்த மழையால் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. இதனால் தேங்கிய மழைநீரின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினர். இதனால் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். மேலும் நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த காரணத்தினால் அந்த பள்ளத்தில் சேறும் சகதியுமாகவும், சாலை ஓரத்தில் மணல் அதிகமாக கொட்டியிருந்ததால் முழுவதுமாக பஸ் கவிழாமல் பாதி அளவு சாய்ந்து எப்போது விழும் என்று தெரியாத வகையில் இருந்தது.

    கடலூர் - சிதம்பரம் சாலை 24 மணி நேரமும் அதிக அளவில் வாகனங்கள் செல்லும் போக்குவரத்து உள்ள சாலை என்பதால் இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யமுடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.  இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    விழுப்புரம் - நாகப்பட்டினம் வழியாக 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலம் கையகப்படுத்தியும், சாலைகள் முழுவதும் பெயர்த்து புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளானமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருவதாலும், தொடர் மழை காரணமாக இந்த வழியில் செல்லும் வாகனங்கள் அதிகமாக விபத்துகுள்ளாகி வருகிறது. இதனால் அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கூறினர். 

    • 2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் பஸ் மூலம் சுற்றுலா வந்தனர்
    • குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னூர்,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முத்தப்பாளையம் பகுதியில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் இருந்து 2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் மினி பஸ் மூலம் சுற்றுலா வந்தனர். அங்கு உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டனர்.

    குன்னூர் அடுத்து காட்டேரி பகுதியில் வேன் சென்றது. அப்போது ஓடும் பஸ்சில் டிரைவர் குழந்தைசாமிக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

    இந்த பஸ் ஒருவேளை மாற்று திசையில் திருப்பி இருந்தால், சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இருக்கும். அதிர்ஷ்ட வசமாக தடுப்பு சுவரில் வாகனம் மோதியது. இதனால் வண்டியில் இருந்த 22 பேர் உயிர்தப்பினர்.சுற்றுலா பஸ் டிரைவருக்கு விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து 60 பயணிகள் ஒரு பஸ்சில் கன்னியாகுமரிக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.

    இவர்கள் வந்த சுற்றுலா பஸ் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் தோரண நுழைவுவாயில் வழியாக செல்ல முயன்றது அப்போது அந்த பஸ்சின் மேல் கூரை நுழைவாயிலின் மேல்பகுதியில்மோதியது. இதில் அந்த நுழைவாயி லின் மேல் பகுதி அந்த சுற்றுலா பஸ்சின் மீது இடிந்து விழுந்தது.

    பஸ்சின் மீது நுழைவு வாயிலின் மேல் பகுதி உடைந்து விழுந்ததை பார்த்து அந்த பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே குதித்து உயிர் தப்பினார்கள்.

    இந்த விபத்து நடந்த இடத்துக்கு அருகில் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவ தற்காக காத்திருந்த சுற்றுலா பயணிகளும் இதை கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். சுற்றுலாபஸ் விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி தகவல் அறிந்த தும் கன்னியாகுமரி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினார்கள். அந்த பஸ்சை பல மணி நேரம் போராடி மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    • டீ குடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.
    • தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள விருத்தாசலம் சாலை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர். இவர் இன்று அதிகாலை டீகுடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக ந்த சுற்றுலா பஸ் பெரியசாமி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்: 

    சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை சென்னை ரெட்ஹில்ஸ் அண்ணா தெருவை சேர்ந்த ராபின்சிங் (வயது 53), என்பவர் ஓட்டி சென்றார். அந்த பஸ் விழுப்புரம் அருகே கன்னிகாபு ரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டி ருந்தபோது டிரைவர் பிரேக் பிடித்தார். இதில் டிரைவரின் கட்டுப்பா ட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (57), தூத்துக்குடி சோலை தெற்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மார்த்தாண்டம் தேங்காய் பட்டினம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(44), கன்னியாகுமரி மாவட்டம் கொல்லி மலை மாதவரம் பகுதி சேர்ந்த ராஜேந்திரன் (45) உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த மயிலம் போலீசார் காயமடைந்த வர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×