search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மந்தமாக நடைபெறும் சாலை விரிவாக்க பணி :மழையால் சாலை ஓரம் கவிழ்ந்த சுற்றுலா பஸ்
    X

    சாலை ஓர பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

    மந்தமாக நடைபெறும் சாலை விரிவாக்க பணி :மழையால் சாலை ஓரம் கவிழ்ந்த சுற்றுலா பஸ்

    • மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. இதனால் தேங்கிய மழைநீரின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினர்.
    • மணல் அதிகமாக கொட்டியிருந்ததால் முழுவதுமாக பஸ் கவிழாமல் பாதி அளவு சாய்ந்தது .

    கடலூர்:

    கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா பஸ் சென்றது. கடலூர் அடுத்த செம்மங்குப்பம் பகுதிக்கு பஸ் வந்தபோது சாலையின் ஒருபுறத்தில் நேற்று பெய்த மழையால் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. இதனால் தேங்கிய மழைநீரின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினர். இதனால் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். மேலும் நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த காரணத்தினால் அந்த பள்ளத்தில் சேறும் சகதியுமாகவும், சாலை ஓரத்தில் மணல் அதிகமாக கொட்டியிருந்ததால் முழுவதுமாக பஸ் கவிழாமல் பாதி அளவு சாய்ந்து எப்போது விழும் என்று தெரியாத வகையில் இருந்தது.

    கடலூர் - சிதம்பரம் சாலை 24 மணி நேரமும் அதிக அளவில் வாகனங்கள் செல்லும் போக்குவரத்து உள்ள சாலை என்பதால் இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யமுடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    விழுப்புரம் - நாகப்பட்டினம் வழியாக 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலம் கையகப்படுத்தியும், சாலைகள் முழுவதும் பெயர்த்து புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளானமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருவதாலும், தொடர் மழை காரணமாக இந்த வழியில் செல்லும் வாகனங்கள் அதிகமாக விபத்துகுள்ளாகி வருகிறது. இதனால் அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கூறினர்.

    Next Story
    ×