என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உறுதிமொழி ஏற்பு"
- 276 பயனாளிகளுக்கு ரூ.15,50,000 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
- துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 361 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் திருப்பூர் மாவட்ட முஸ்ஸிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, உயர்கல்வி உதவித்தொகை என 276 பயனாளிகளுக்கு ரூ.15,50,000 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கண்காணிப்பாளர்கள் ஈஸ்வரி, விஜயகார்த்திக், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
- போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியான இந்திய குடிமகன் குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிபேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பஸ் போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழியினை எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் வாசிக்க ஏடிஎஸ்பி இளங்கோவன் மற்றும் போலீசார் அமைச்சுப் பணியாளர்கள் உடன் வாசித்தனர்.
- கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.
- கலெக்டர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் திரும்ப படித்து எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜனம் நடைபெற்றது
- கலெக்டர் மா.பிரதீப் குமார், மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், கலந்து கொண்டு கூட்டு மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், சிறப்பான முறையில் ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இதில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் எஸ்.லெட்சுமி, மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் எஸ்.எம்.மணிவண்ணன், மாநகர் நல அலுவலர் டாக்டர் ஷர்மிளி,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்நுயிர் துறைத் தலைவர் திடாக்டர் கி.ஞானகுரு, துணை இயக்குநர் (காசநோய்) மரு.சாவித்திரி, எச்.ஐ.வியுடன் வாழ்வோர்க்கான கூட்டமைப்பு தலைவர் ஆர்.தமிழ் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
குழந்தைகளுக்கு எதிராக நிகழக்கூடிய அனைத்து தீங்குகள் மற்றும் தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் எனவும், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் இல்லாத குழந்தை நேய சமூகத்தை உருவாக்குவதோடு குழந்தைகளை மரியாதையோடும், மதிப்போடும், தோழமையோடும் நடத்துவேன் எனவும்... குழந்தைகளுக்கு உதவி தேவைப்படும் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்வேன் எனவும், 1098 ஐ அழைப்பேன் எனவும் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
- மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி, தேசிய ஒற்றுமை நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல் புகழை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய்பட்டேலின் தொலைநோக்குப்பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர் வினைப்பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- மேயர் தினேஷ்குமார் தலைமையில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதில் நான் சாதி, இன , வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி எடுத்து கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்து கொள்வேன் என்றும் இதனால் உறுதிமொழி அளிக்கிறேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்