என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணீஷ் சிசோடியா"
- மணீஷ் சிசோடியா கடந்த 17 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
- அவரை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.
மணீஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். காவே மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மணீஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
விசாரணையை தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கினர். மேலும், மணீஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், 17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து இன்று மாலை மணீஷ் சிசோடியா வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார்.
- இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தது.
புதுடெல்லி:
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார். இந்த ஊழல் விவகாரத்தில் அவரை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
இந்த வழக்கில் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிசோடியா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினர். அவர் வெளிநாடு செல்வதை தவிர்க்கும் நோக்கில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர். ஜாமின் காலத்தில் சாட்சியங்களை கலைக்கும் செயலில் சிசோடியா ஈடுபடக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் டெல்லி அமைச்சர் அதிஷி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பொய்யான வழக்கில் மணீஷ் சிசோடியா அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்தது. தற்போது ஜாமினில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று உண்மை வென்றது, கல்வி வென்றது, குழந்தைகள் வென்றுள்ளனர் என தெரிவித்தார்.
மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்ததை கூறுகையில், அமைச்சர் அதிஷி மேடையில் தேம்பி தேம்பி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த வழக்கில் சுமார் 17 மாதம் கழித்து சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Delhi Minister and AAP leader Atishi gets emotional after Supreme Court granted bail to AAP leader Manish Sisodia
— ANI (@ANI) August 9, 2024
She says, "Today the truth has won, the students of Delhi have won...He was put in jail because he provided good education to poor children." pic.twitter.com/S5OqxjJ4h0
- மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
- இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. டெல்லி உயர் நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை நிராகரித்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், இன்று ரோஸ் அவென்யு கோர்ட்டில் சி.பி.ஐ. அவரை நேரில் ஆஜர்படுத்தியது. அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
- மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
- இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை நிராகரித்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூலை 6-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
- இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனு மீதான தீர்ப்பு வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
- மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல் மந்திரியாக இருந்தவர் மணீஷ் சிசோடியா.
மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
இந்நிலையில், திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா தனது சட்டசபைத் தொகுதியான பட்பர்கஞ்ச் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
விரைவில் வெளியில் சந்திக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பினர்.
பல ஆண்டுகள் சிறையிலிருந்த மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் எனக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.
சுதந்திரத்துக்காக மக்கள் போராடியது போன்று நல்ல கல்வி மற்றும் பள்ளிகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். சிறையில் இருக்கும்போது எனது தொகுதி மக்கள் மீதான அன்பு அதிகரித்துள்ளது. அவர்கள் தான் எனது பலம்.
வளர்ந்த நாட்டுக்கு நல்ல கல்வி அவசியம். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கல்வி புரட்சி நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என எழுதியுள்ளார்.
சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு நாளை டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது.
- இந்த ஒரு வருடத்தில் அரசால் ஒரு ஆதாரத்தை கூட கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை.
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு மணீஷ் சிசோடியாவை பொய் வழக்கில் கைது செய்தது. அவர் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் அரசால் ஒரு ஆதாரத்தை கூட கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை. இது பொய் வழக்கு.
75 ஆண்டுக்குப் பிறகு மணீஷ் சிசோடியா ஏழைகளின் குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைக் கொண்டு வந்தார். ஏழைகளின் குழந்தைகளுக்கு கனவு காணும் உரிமையை அவர் வழங்கினார். அப்படிப்பட்ட மனிதரை பொய் வழக்கில் சிறையில் அடைத்துள்ளனர்.
அவர் எங்களுக்கு முன் மாதிரியாக உள்ளார். பா.ஜ.க.வில் இணைந்திருந்தால் அவர் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டிருக்கும். ஆனால் அவர் சத்தியத்தின் பாதையை விடவில்லை என தெரிவித்தார்.
#WATCH | Delhi CM Arvind Kejriwal speaks on party leader Manish Sisodia.
— ANI (@ANI) February 26, 2024
He says, "...Central Government arrested him in a false case. Today marks the completion of one year since his arrest. In this one year, the Government could not present even one piece of evidence in the… pic.twitter.com/8k9OMzHa2e
- மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
- மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
அதன்பின், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைதுசெய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை சி.பி.ஐ. அமலாக்கத் துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றன.
இதற்கிடையே, பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத் துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
மேலும், மறு ஆய்வு மனுக்களையும், அதற்கான ஆதாரங்களையும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கருத்துப்படி அக்டோபர் 30-ம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த வழக்கும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.
- மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் கெஜ்ரிவாலுக்கு சம்மன்
- சிபிஐ கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தியிருந்தது
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்காக வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை, 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகம் சென்று அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு எங்கள் கட்சியை அழிக்க நினைக்கிறது என ஆம் அத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஒருவேளை கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கும் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ, கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருக்கிறது.
- மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது
- அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதேவேளையில், டெல்லி மாநில முதல்வராக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்போம் என்பதை வலியுறுத்தி ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி. இந்த கட்சியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஜாமின் பெற முடியாத நிலையில், ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
துணை முதல்வர் இருந்தவர் ஜெயிலில் உள்ளார். ஒருவேளை முதல்வரான கெஜ்ரிவாலும் ஜெயிலுக்கு சென்றால்? அரசை வழி நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி மாற்றுத்திட்டம் வைத்திருக்கும்.
இதுதொடர்பாக டெல்லி மாநில மந்திரி சவுரப் பர்த்வாஜ்யிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில் "மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி கட்சியை தண்டிப்பதற்கான சதிச் செயலாகும்.
ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் தற்போதைய நிலையில், மாற்று திட்டம் குறித்து எனக்கு ஏதும் தெரியாது. அதுபோன்று ஒரு ஆலோசனை நடைபெற்றதாக நான் நினைக்கவில்லை. கெஜ்ரிவால் எங்களுடைய தலைவர். அவருடைய உத்தரப்படி செயல்படுவோம்'' என்றார்.
- மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது.
- சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது.
புதுடெல்லி:
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்வதாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.52 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பொய் சொல்கிறது. சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
- இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது. அமலாக்கத் துறையும் அவரை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று முடக்கியது. மேலும் அமான்தீப் சிங் தால், ராஜேஷ் ஜோஷி, கவுதம் மல்ஹோத்ரா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்