search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கப்பிரதட்சணம்"

    • நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார்.
    • விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார்.

    நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார். இவரது கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரக இருந்தார். எனினும், தேர்தலுக்கு முன் தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்து விட்டார்.

    ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார். ஏற்கனவே அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவாக இருக்கும் மாணிக்க தாகூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் தனது மனைவி ராதிகா  விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என சரத்குமார் பராசக்தி அம்மன்  கோவிலில் அங்கப்பிரதிஷ்டம் செய்தார். இவர் அங்கப்பிரதிஷ்டம் செய்யும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • அன்னதானத்தில் தரமான அரிசியை பயன்படுத்தி வருகிறோம்.
    • உணவின் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த புகார்கள், குறைகள், ஆலோசனைகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

    பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதற்கு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி அளித்த பதில்களும் வருமாறு:-

    கோபிச்சாரி, குண்டூர்: திருப்பதி தேவஸ்தான இணையதளம் மற்றும் மொபைல் ஆப் பயன்பாடு நன்றாக உள்ளது. ஸ்ரீவாரி சேவைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது ப்ரொபைல் பைலாக வருகிறது. அதை சரி செய்ய வேண்டும்.

    அதிகாரி: நாங்கள் போன் செய்து விவரம் தெரிவிப்போம்.

    அபர்ணா, அனந்தபுரம்: அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 2 மட்டும் ஆன்லைனில் பதிவாகி வருகிறது. அதை 4 ஆக அதிகரிக்க வேண்டும்.

    அதிகாரி: ஒரு பக்தர் ஆன்லைனில் 2 அங்கப்பிரதட்சண டோக்கன்களை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த டோக்கன் பெற முடியாத பக்தர்கள் வேறு வழிகளில் தரிசனம் செய்யலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20 வரை ஆர்ஜித சேவைகளின் லக்கி டிப்புக்கு பதிவு செய்யலாம். 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை டிப் டிக்கெட் பெற்றவர்கள் பணத்தைச் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். பிற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 21-ந்தேதி வெளியாகிறது. ஸ்ரீவாணி, அங்கப்பிரதட்சண, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் 23-ந்தேதி வெளியிடப்படுகிறது. அதேபோல் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 24-ந்தேதி, அறைகள் ஒதுக்கீடு 25-ந்தேதி வெளியிடப்படும். இதைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சீனிவாஸ், சிலக்கலூரிபேட்டை: கல்யாண உற்சவத்தில் குழந்தைகள் பங்கேற்க அனுமதிப்பார்களா?

    அதிகாரி: கல்யாண மண்டபத்தில் இடம் குறைவாக உள்ளதால் கோவிலில் அதிக மக்களை அனுமதிக்க வாய்ப்பில்லை. மைனர்கள் பெற்றோருடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஜெயஸ்ரீ, ஐதராபாத்: மே மாதம் திருமலைக்கு வந்தோம். வெயிலின் வெப்பத்தால் சாலையில் நடந்தது சிரமமாக இருந்தது. தரை விரிப்புகள் போடுங்கள்.

    அதிகாரி: கோடையில் கோவில் தெருக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பகுதிகளில் குளிர்ச்சியாக இருக்க நாங்கள் கூல் பெயிண்ட் மற்றும் மேட்களை போடுகிறோம். அடிக்கடி தண்ணீர் தெளித்து வருகிறோம். ஏதேனும் பிழைகள் இருந்தால் சரி செய்யப்படும்.

    அசோக், சென்னை: மகா அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் நீராட புஷ்கரணிக்கு சென்றால், அங்கு இரவில் புஷ்கரணியை மூடி வைத்துள்ளனர். மேலும் திருமலை நம்பி கோவில் வாசலில் கேட் அமைத்துள்ளனர்.

    அதிகாரி: மகா அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இரவில் புஷ்கரணி திறந்து வைக்கப்படும். திருமலைநம்பி கோவில் வாசலில் உள்ள கேட் அகற்றப்பட்டு காவலர்கள் நிறுத்தப்படுவார்கள்.

    வெங்கட், காக்கிபாரா: லட்டு தரம் சரியில்லை. அன்னதானத்தில் அரிசியின் தரம் சரியில்லை.

    அதிகாரி: லட்டு தயாரிக்கும் தரமான மூலப்பொருட்களை டெண்டர் மூலம் வாங்கி வருகிறோம். சிறந்த தரத்துக்கான பரிந்துரைகளை போட்டு ஊழியர்களுக்கு வழங்குவோம். அன்னதானத்தில் தரமான அரிசியை பயன்படுத்தி வருகிறோம். உணவின் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.

    மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

    • பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்து வருகிறது.
    • சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் பாடி வந்தனர்.

    கல்லிடைக்குறிச்சி உலோபா முத்திரை உடனுறை அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்து வருகிறது.

    7-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7 மணிக்கு பச்சை சாத்தி வீதி உலாவும் நடைபெற்றது, பின்னர் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

    பால்குட ஊர்வலத்துக்கு முன்பு அலங்காரம் செய்யப்பட்ட யானையுடன் வடிவாம்பிகை வழிபாட்டு குழு சார்பில் சிவனடியார்கள் இணைந்து தேவாரம், திருவாசகம் பாடி வந்தனர்.

    இந்த ஊர்வலம் தலச்சேரி மானேந்தியப்பர் கோவில், பிள்ளையார் கோவில், சுப்பிரமணிய சாமி கோவில்களை கடந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தது. இதில் ஆண் பக்தர்கள் அங்க பிரதட்சணமும், பெண் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரமும் செய்து சுவாமி-அம்பாளை வழிபட்டனர்.

    மதியம் 1 மணிக்கு மேல் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும், மாலை 4 மணிக்கு அன்னம் சொரிதலும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு புஷ்ப அலங்கார மின்னொளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதிஉலா வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் குமார கோவில் தெற்கு ரதவீதியில் அகஸ்தியருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 23-ந்தேதி அம்பாள் திரு வீதி உலா நடக்கிறது.
    • இரவு 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு கோவிலில் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்.

    காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி-பங்குனி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. வருகிற 21-ந்தேதி இரவு முத்தாலம்மன் கோவிலில் இருந்து கோவில் கரகம் மற்றும் பக்தர்கள் மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி பால்குடம், காவடி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், மாலையில் கோவில் கரகம், மது மற்றும் முளைப்பாரி புறப்படுதல் நிகழ்ச்சியும் இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    23-ந்தேதி இரவு அம்பாள் திரு வீதி உலா, மறுநாள் மாலை சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி காப்புகட்டி பல்வேறு நேர்த்திக்கடன் எடுக்க உள்ள பக்தர்கள் தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் கோவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இரவு கும்மி கொட்டுதல், கலை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இதுதவிர காலை மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், கும்பிடு தானம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பக்தர் ஒருவர் முத்தாலம்மன் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அங்க பிரதட்சணம் மேற்கொண்டார். இரவு 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு கோவிலில் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்.

    கோவில் திருவிழா நடைபெற்று வருவதையொட்டி தற்போது காரைக்குடி நகர் முழுவதும் பக்தர்கள் மஞ்சள் வேட்டி மற்றும் மஞ்சள் புடவையுடன் வலம் வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி மற்றும் கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • மார்ச் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் இன்று ஆன்லைனில் வெளியிடுகிறது.
    • ஆன்லைன் முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மார்ச் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டையும், இந்த மாதம் 23, 28-ந் தேதிகளுக்கான வெளியிடப்படாத டோக்கன்கள் ஒதுக்கீட்டையும் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

    பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இணையதளத்தில் ஒதுக்கீடு அடிப்படையில் டோக்கன்கள் வெளியிடப்படுகிறது.
    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவது பிப்ரவரி 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஒதுக்கீடு அடிப்படையில் டோக்கன்கள் வெளியிடப்படுகிறது.

    எனினும், கோவிலில் பாலாலயம் நடக்க இருப்பதால் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவது பிப்ரவரி மாதம் 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செப்டம்பர் 27-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்துக்கான (செப்டம்பர்) அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    ஆனால் செப்டம்பர் மாதம் 27-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழாவையொட்டி அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்கப்பிரதட்சண டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ×